இங்க பாருங்க.. சேவாக் கூட அபிஷேக கம்பேர் பண்ணக்கூடாது.. என் பிளேயர் வேற மாதிரி – கங்குலி வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாது உலக கிரிக்கெட்டில் முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாடிய வீரேந்தர் சேவாக் உடன் தற்போது இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை ஒப்பீடு செய்யக்கூடாது என அதிரடியாக சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்த காலத்தில் வீரேந்தர் சேவாக் இந்திய அணிக்கு கொண்டுவரப்பட்டார். ஆனால் மிடில் வரிசையில் விளையாடிக் கொண்டிருந்த அவரை கட்டாயப்படுத்தி துவக்க வீரராக சௌரவ் கங்குலிதான் விளையாட வைத்தார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக அவர் உருவெடுத்தார்.

- Advertisement -

மேலும் வீரேந்தர் சேவாக் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அதிரடி வீரராக அறியப்பட்ட போதிலும் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதே அதிரடியுடன் நிலைத்தன்மையாக விளையாடி அசத்தியிருக்கிறார். உதாரணமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக முச்சதம் அடித்த ஒரே வீரர் வீரேந்தர் சேவாக் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து சௌரவ் கங்குலி பேசும் பொழுது ” எனக்கு அபிஷேக் ஷர்மாவை பிடிக்கும். அவர் விளையாடுவதை பார்க்க பிடிக்கும். அவர் ஒரு நல்ல வீரர். ஆனால் அவரை வீரர் சேவாக் உடன் ஒப்பிடக்கூடாது. ஏனென்றால் சேவாக் முழுமையான ஒரு சாம்பியன் வீரர். அபிஷேக் ஷர்மா இன்னும் அந்த இடத்தை எட்டவில்லை ஆனால் எட்ட வாய்ப்புகள் உண்டு” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles