இதை நான் நேரடியா தோனிகிட்டயே கேட்பேன்.. ஆனா மீடியா உங்ககிட்ட நான் சொல்ல மாட்டேன் – சௌரவ் கங்குலி அதிரடி

19வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா நாளை துவங்க உள்ள நிலையில் அனைத்து அணிகளும் மிகவும் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஆறாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவு கங்குலி, எம்எஸ் தோனியிடம் நான் அந்த கேள்வியை நேரடியாக கேட்பேன் எனவும், ஆனால் மீடியா உங்களிடம் அது குறித்து தெரிவிக்க மாட்டேன் எனவும் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு தன் உடல் தகுதியை வைத்து அடுத்த ஆண்டு விளையாடுவேனா? இல்லையா? என்று கூறுவேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மேலும் தோனி வயதான காரணத்தால் அதிக ஓவர்கள் விளையாடாமல் இருப்பது சொந்த ரசிகர்களாலே விரும்பப்படுவதில்லை.

- Advertisement -

மேலும் அவரது ஓய்வு குறித்த எதிர்பார்ப்பு ஒரு வணிகம் ஆகவே மாறிவிட்டதால் இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்திய வருகிறது. இந்த சூழ்நிலையில் அவரை முன்பு கேப்டன் ஆக்கிய சவுரவ் கங்குலி அவரது ஓய்வு முடிவு குறித்து பேசும் போது “தோனி எப்போது ஓய்வு பெறுகிறார் என்று குறித்து நான் அவரிடமே நேரடியாக கேட்பேன் எனவும் ஆனால் மீடியா உங்களிடம் அது குறித்து பேச மாட்டேன்” என்று கூறியிருக்கிறார். இதனால் தோனி விளையாடுவது கங்குலிக்கு அவ்வளவு விருப்பம் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles