இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தற்போது பாகிஸ்தான் இந்திய அணிக்கு எதிராக விளையாட முடியாது என்று அறிவித்திருப்பது குறித்தும், இந்திய அணி அமெரிக்க அணிக்கு எதிராக தடுமாறி இருப்பது குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இதுகுறித்து சௌரவ் கங்குலி பேசும் பொழுது ” முதலில் பாகிஸ்தான் எடுத்த இந்த முடிவு அர்த்தமே இல்லாத ஒன்று. உலகக் கோப்பை என்று வரும்பொழுது ஒவ்வொரு புள்ளிகளும் மிக மிக முக்கியமானது. ஆனால் அவர்கள் முட்டாள் தனமான முடிவை எடுத்து இருக்கிறார்கள். மேலும் அவர்கள் இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் விளையாடவில்லை, இலங்கையில்தான் விளையாடுகிறார்கள்”
“இந்த இந்திய அணியில் இருப்பவர்களும் மனிதர்கள்தான். எனவே அவர்களுக்கும் அவர்கள் வழியில் விஷயங்கள் செல்லாத நாட்கள் இருக்கவே செய்யும். ஆனால் அவர்கள் ரிதத்திற்கு திரும்பி இந்த உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக வருவார்கள்”
“மேலும் இந்தியா பேட்டிங், பௌலிங், பீல்டிங் என எல்லா துறைகளிலும் மிகவும் வலிமையாக இருக்கக்கூடிய ஒரு அணி. இந்த அணி நிச்சயமாக இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்லும். இவர்கள்தான் என்னுடைய ஃபேவரைட் ஆக இந்த உலகக் கோப்பையில் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

