தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலகக்கோப்பையின் முப்பதாவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி புனேவில் வைத்து நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபி போட்டிகளுக்கு இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தவிர்த்து முதல் ஏழு இடங்களுக்குள் இடம்பெறும் தான் பங்கேற்க முடியும் என்பதால் இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமைந்தது .
மேலும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுக்கும் அரையூதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இதனால் இரண்டு அணிகளும் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் மோதின. முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணியில் துவக்க வீரரான கருணரத்னே 15 ரன்களில் ஆட்டம் இழந்தார் . இவரைத் தொடர்ந்து கேப்டன் குஷால் மெண்டிஸ் மற்றும் பதும் நிசாங்கா இருவரும் இரண்டாவது விக்கெட்க்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
இந்நிலையில் 60 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிசாங்கா அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கேப்டன் மெண்டிஸ் 39 ரன்னிலும் சமர விக்கிரமா 36 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இலங்கை சிறிது தடுமாற்றத்தை சந்தித்தது. இவர்களைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர் தனஞ்செயா டிசில்வா 14 ரன்னிலும் சரித் அசலங்கா 22 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மேலும் இன்றைய போட்டிக்கு திரும்பிய சமீரா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் இலங்கை அணி 185 ரன்கள் 7 விக்கெட் இழந்து தடுமாறியது.
அப்போது அணியின் அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் சுழற் பந்துவீச்சாளர் தீக்ஷனாவுடன் கூட்டணி அமைத்து இவர்கள் இருவரும் சேர்ந்து எட்டாவது விக்கெட்க்கு 45 ரன்கள் சேர்த்தனர். இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் 220 ரன்கள் கடந்தது. அப்போது தீக்ஷனா புத்தி ஒரு பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உடன் 29 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேத்யூஸ் 26 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியாக ரஜிதா 5 ரன்னில் ஆட்டம் இழக்க இலங்கை அணி 49.3 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது . ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் பாரூக்கி 4 விக்கெட்டுகளும் முஜிபுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க வீரர் குர்பாஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். எனினும் அந்த அணியின் இப்ராஹிம் ஜட்ரான் மற்றும் ரஹ்மத் ஷா ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட் இருக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்நிலையில் 57 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உடன் 39 ரண்களில் ஆடிக்கொண்டிருந்த இப்ராகிம் அவுட் ஆனார். இவருடன் மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ரஹ்மத் ஷா அரை சதம் அடித்தார்.
இவர் பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் போதும் அரை சதம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 74 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 62 ரன்களில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரஹமத் ஷா இலங்கை அணி ரஜிதா வீசிய பந்தில் அவுட் ஆனார் . அப்போது ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 116 ரன்கள் தேவைப்பட்டது . களத்தில் இருந்த கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷகிதியுடன் இணைந்தார் உமர்சாய். இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தான் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றனர்.
ஷஹீதி மற்றும் உமர்சாய் இருவரும் அரை சதம் அடித்தனர். இவர்கள் நான்காவது விக்கெட் இருக்கு பார்ட்னர்ஷிப்பாக 111 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 242 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இது ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையில் பெரும் மூன்றாவது வெற்றியாகும். அணியின் கேப்டன் ஷஹீதி 74 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 58 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவருடன் அதிரடியாக விளையாடிய உமர்சாய் 63 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி மூன்று வெற்றிகள் உடன் 6 புள்ளிகள் பெற்று பாயிண்ட்ஸ் டேபிள் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இன்னும் மீதி இருக்கும் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அந்த அணி உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.

