ஸ்ரேயாஸ் ஐயர் தான் வெளிய போறதா சொன்னார்.. அவர் பிளானே வேற.. அதான் அவர கொல்கத்தா ரிலீஸ் பண்ணுச்சு – சைமன் டவுல் ஓப்பன் டாக்

நேற்று அக்டோபர் 31 மாலை 5:30 அணிக்கு அனைத்து ஐ.பி.எல் அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலையும் அவர்களுக்கு கொடுக்கும் தொகையையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எதிர்பார்த்த செய்திகளைப் போலவே சில நட்சத்திர வீரர்கள் இம்முறை ஏலத்திற்கு வருகிறார்கள்.

- Advertisement -

அதில் மிகவும் ஆச்சர்யமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் பெயர் தான் ஐ.பி.எல் கோப்பை வென்ற கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர். கடந்த ஆண்டு தரமான படையுடன் பெரிய ஆதிக்கம் செலுத்தி கோப்பையை வென்றது ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. கோப்பை வென்ற கேப்டன் என்றும் பாராலும் அவர் அணியால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

2022ஆம் ஆண்டு ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை 12.25 கோடிகளுக்கு ஏலத்தில் வாங்கியது. அந்த ஆண்டு அவர் 30.85 சராசரியில் 401 ரன்கள் அடித்தார். அதற்கு அடுத்த ஆண்டு காயத்தால் முழுவதுமாக வெளியேறினார். கடந்த ஆண்டு அணியில் கம்பேக் கொடுத்தா ஐயர் வெறும் 351 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் பெரிய குறையாக பேசப்பட்டது. ஐயரின் திறனுக்கும் அவர் மேல் இருக்கும் எதிர்பார்ப்புக்கும் இதெல்லாம் மிகப் பெரிய ஏமாற்றமாக பார்கப்படுகிறது.

- Advertisement -

இருப்பினும் கொல்கத்தா அணி ஐயரை தக்க வைக்க ஒரு தொகையைப் பேசியுள்ளது. ஆனால் சில செய்தகளின் படி அவருக்கு அது போதாததால் வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி போன்ற மற்ற 2 அணிகள் அவரிடம் வேறு டீல் பேசியுள்ளாதால் அவர் தானாக வெளியேறியதாக சொல்கிறார்கள். இது குறித்து சைமன் டவுல் தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, ” ஷ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் தொடர பிடிக்கவில்லை. அவர் ஏலத்திற்குள் போக விரும்புகிறார். அவருக்கே கொல்கத்தா அணியில் இருக்க விருப்பமில்லை எனும் போது அவரை வற்புறுத்துவது தவறே. அதனால் மட்டுமே அவர் கோப்பை வென்ற கேப்டன் என்ற பட்சத்திலும் விடுவிக்கப்பட்டுள்ளார். “

- Advertisement -

மேலும், ” கொல்கத்தா அணி ஏற்கனவே அவர்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் முக்கிய வீரர்களான ரின்கு சிங், வருண் சக்ரவர்த்தி, நரைன், ரஸல், ஹர்ஷித் ராணா ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது. இவர்கள் ஏலத்திற்கு வந்தால் இரண்டு மடங்கு இல்லை மூன்று மடங்கு கூட விலை போவார்கள். “

சைமன் டவுல் கூறியதை வைத்துப் பார்க்கையில் ஷ்ரேயாஸ் ஐயர் தன் விருப்பத்தோடு தான் அணியில் இருந்து விலகியுள்ளார். மீண்டும் தன் பழைய அணியான டெல்லிக்கு கேப்டனாக செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles