இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அன்னிக்கு எதிரான போட்டியில் மிகவும் மோசமாக விளையாடி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக தற்பொழுது தொடரை நடத்தும் நாடான இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கு பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மிகக்குறிப்பாக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் எளிதாக விளையாடிய ஒரு ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். மேலும் இந்திய அணியின் மர்ம சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை தென் ஆப்பிரிக்கா மிகவும் எளிதாக விளையாடி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதுகுறித்து சோயப் அக்தர் பேசும்பொழுது “ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே இருவரும் 120 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார்கள். வலிமையான தென் ஆப்பிரிக்கா பேட்டிங் யூனிட்டை இவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. இவர்கள் மால்கம் மார்சல் போன்ற சூப்பர் ஸ்டார் பவுலர் இல்லை. இவர்களை எளிதாக தென் ஆப்பிரிக்கா நொறுக்கிவிடும்”
“அடுத்து வருண் சக்கரவர்த்தியை தென் ஆப்பிரிக்கா மிக எளிதாக விளையாடியது. அவர் 96 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி கொண்டு இருந்தார். ஆனால் பிரிவிஸ் சாதாரணமாக பந்தை பார்க்காமலே நோ லுக் சிக்ஸர் அடித்து அசத்தினார். எனவே காற்றில் பந்தை வைத்து பேட்ஸ்மேன்களை ஏமாற்றி விக்கெட் எடுக்கும் குல்தீப் யாதவை கொண்டு வர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

