சிஎஸ்கே சிங்கம்டா.. விதர்பாவை சுக்குநூறாக்கிய சிவம் துபே.. ரஞ்சி டிராபியில் பவுலிங்கிலும் மிரட்டிட்டாருயா!

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபே கடந்த சில மாதங்களாகவே பவுலிங்கில் அசத்தி வருகிறார். சிஎஸ்கே அணிக்காக பெரும்பாலும் பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத நிலையில், இந்திய டி20 அணிக்காக அவ்வப்போது சில ஓவர்களை வீசி வந்தார். அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்து டி20 தொடரில் சிவம் துபேவின் பவுலிங் அசத்தலாக அமைந்தது.

- Advertisement -

சிவம் துபே சம்பவம்

- Advertisement -

பேட்டிங்கில் சிக்சர்களை விளாசிய அசத்தியதோடு, ஒவ்வொரு போட்டியிலும் பவுலிங் செய்து அசத்தினார். அதிலும் கடைசி டி20 ஆட்டத்தில் சிவம் துபே முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஃபார்மை உள்ளூர் கிரிக்கெட்டிலும் சிவம் துபே பவுலிங்கில் வெளிப்படுத்தி வருகிறார். ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதியில் விதர்பா அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கியது.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற விதர்பா அணியின் கேப்டன் அக்‌ஷய் வத்கர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் முழுவதும் பேட்டிங் ஆடிய விதர்பா அணி சிறப்பாக ஆடிய நிலையில், 2வது நாளின் முதல் செஷனிலேயே ஆல் அவுட்டாகியது. மொத்தமாக 107.5 ஓவர்களில் 383 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி உள்ளது. சிறப்பாக ஆடிய துருவ் ஷோரே 74 ரன்களும், தனிஷ் மாலேகர் 79 ரன்களும், யாஷ் ரதோட் 54 ரன்களும் எடுத்தனர்.

சிவம் துபே பவுலிங்

- Advertisement -

மும்பை அணி தரப்பில் நட்சத்திர வீரர் சிவம் துபே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் பார்த் ரெக்காட், கருண் நாயர், ஹர்ஷ் துபே, பூட்டே மற்றும் யாஷ் தாக்கூர் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 11.5 ஓவர்கள் வீசிய அவர், 49 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

பழைய பந்தில் சிறப்பாக ஸ்விங் செய்த சிவம் துபேவுக்கு விக்கெட்டுகள் அடுத்தடுத்து கிடைத்தது. இதனால் அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலும் சிவம் துபே சிஎஸ்கே அணிக்காக பவுலிங்கிலும் சிறந்த பங்களிப்பை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிவம் துபேவின் ஆட்டம் நாளுக்கு நாள் முதிர்ச்சியுடன் அமைந்து வருகிறது.

இதனால் சிஎஸ்கே அணியின் மிக முக்கிய வீரராக சிவம் துபே இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த அவர், கம்பேக் கொடுத்த பின் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் அசத்தலாக செயல்பட்டு வருகிறார். இதனால் சிஎஸ்கே ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles