இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த தொடக்க வீரர்களில் ஷிகர் தவானும் ஒருவர். 2022ஆம் ஆண்டுக்கு பின் இளம் வீரர்களின் எழுச்சியால் ஷிகர் தவான் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். இதன்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷிகர் தவான், புதிய காதலியுடன் ஊர் சுற்றி வருகிறார். இந்த நேரத்தில் தனது சுய சரிதை புத்தகத்தையும் எழுதி இருக்கிறார்.
ஷிகர் தவான் ரகசியம்
தி ஒன்: கிரிக்கெட், மை லைப் மற்றும் பல என்று அந்த புத்தகத்திற்கு பெயரிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் 2006ல் இந்திய ஏ அணிக்காக விளையாடிய போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்ற போது நடந்த சம்பத்தை எழுதி இருக்கிறார். அந்த காதலிக்கு எலன் என்று பெயரிட்டுள்ளார். அவரின் ரியல் பெயர் அது அல்ல என்றும் கூறி இருக்கிறார்.
அதில் ஷிகர் தவான், 2006 இந்திய ஏ அணிக்காக விளையாடிய போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். அப்போது நானும், ரோகித் சர்மாவும் ஒரே அறையை பகிர்ந்து கொண்டோம். பயிற்சி போட்டியிலேயே அரைசதம் அடித்திருந்ததால், உற்சாகமாக இருந்தேன். அந்த நேரத்தில்தான் எலனை சந்தித்து காதலில் விழுந்தேன்.
பாவம் ரோகித் சர்மா
திடீரென அவரும் நானும் திருமணம் வரை பேச தொடங்கி சிந்திக்க ஆரம்பித்தோம். ஒருநாள் யாருக்கும் தெரியாமல் என் காதலியை அறைக்கு அழைத்து வந்துவிட்டேன். ஆனால் அறையில் ரோகித் சர்மா இருந்தார். நாங்கள் செய்த சம்பவங்களால், அவரால் தூங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், என்னை கொஞ்சம் தூங்கவிடுங்கள் என்று கெஞ்சினார்.
அதன்பின் நானும் அவரும் டின்னரின் போது சந்தித்து வந்தோம். ஒரு கட்டத்தில் எங்களை பற்றி ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் தெரிந்துவிட்டது. சீனியர் தேர்வு குழு நிர்வாகி எங்களை நேரடியாக பார்த்துவிட்டார். அப்போதும் கூட காதலியின் கைகளை விடாமல் பற்றிக் கொண்டிருந்தேன். நான் தவறு செய்கிறேன் என்பதே தெரியவில்லை. அந்த நேரத்தில் சிறப்பாக ஆடி இருந்தால், சீனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பேன். ஆனால் மோசமாக ஆடி வந்தேன் என்று கூறி இருக்கிறார்.

