எங்க தென் ஆப்பிரிக்கா பலமானது.. ஆனா 2 இந்திய வீரர்கள் எங்களை முடிச்சு விட்டுருவாங்க.. அவங்கதான் பிரச்சனை – ஷான் பொல்லாக் கணிப்பு

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி உடன் முதல் சுற்று முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்று நாளை மறுநாள் பிப்ரவரி 22ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இதில் முதல் போட்டியில் மதியம் 2 மணிக்கு இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இரண்டாவது சுற்றில் வலிமையான அணிகள் மோதுவதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

தற்போது உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு அடுத்து பலம் வாய்ந்த அணியாக தென் ஆப்பிரிக்க அணி பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா அணி தங்களுடைய அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் விளையாடுவது அவர்களுக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அவர்கள் அதிகப்படியான போட்டிகளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடுகிறார்கள். இந்த நிலையில் இரண்டு அணிகளுக்குமான போட்டி குறித்து தென் ஆப்பிரிக்கா முன்னாள் லெஜன்ட் ஷான் பொல்லாக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஷான் பொல்லாக் கூறும்பொழுது “இரண்டு அணிகளுமே சமமான பலத்துடன் இருக்கின்றன. இந்திய அணியின் அபிஷேக் சர்மாவுக்கு இணையாக தாக்குதல் ஆட்டத்தை குயின்டன் டி காக் ஆட முடியும். மேலும் கேப்டன் மார்க்ரம் யாருக்கு நிகராகவும் பேட்டிங் செய்ய முடியும். இரண்டு அணிகளிலும் சம பலம் வாய்ந்த வீரர்கள் இருக்க செய்கிறார்கள். ஆனால் பந்துவீச்சு என்று பார்க்கும் பொழுது தான் இந்திய அணி கொஞ்சம் முன் இருக்கிறது. இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்களாக இருக்கிறார்கள். இவர்கள்தான் தென் ஆப்பிரிக்க அணிக்கு பிரச்சனை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles