என்ன வேணாலும் சொல்லுங்க.. அந்த வீரர் இல்லாம உலகக் கோப்பைல வருத்தப்பட போறோம்.. யுவராஜ் சிங் ஓப்பன் டாக்.!

13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வருகின்ற 5-ம் தேதி முதல் துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த உலகக் கோப்பை போட்டியின் முதலாவது போட்டி நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் வைத்து ஐந்தாம் தேதி துவங்க இருக்கிறது.

- Advertisement -

உலகக்கோப்பை போட்டிகளுக்கு தயாராகும் வகையில் தற்போது கலந்து கொள்ளும் அனைத்து அணிகளும் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன . நேற்று நடைபெற இருந்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் மழையால் கைவிடப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது .

- Advertisement -

இன்று நடைபெற இருக்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது . மேலும் இந்தியா உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து மோத உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை இந்தியா வென்ற நிலையில் தனது முதல் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- Advertisement -

மேலும் உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியில் கடைசி நிமிடத்தில் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த மூத்த ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டார். ஆசிய கோப்பை தொடரின் போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக இறுதி அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் சுழற் பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங் இந்திய அணி நிர்வாகம் யுஸ்வேந்திர சாஹல் அணையில் இருந்து நீக்கி இருப்பது உலகக்கோப்பையில் அணிக்கு பின்னடைவாக அமையலாம் என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் விரிவாக பகிர்ந்து இருக்கிறார் யுவராஜ் சிங்.

- Advertisement -

இது தொடர்பாக விரிவாக பேசியிருக்கும் அவர்”யுஸ்வேந்திர சாஹலை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யாதது மிகப்பெரிய தவறாக அமையலாம். ஏனென்றால் லெக் ஸ்பின்னர்கள் எப்போதும் விக்கெட்டை வீழ்த்தக் கூடியவர்கள். குறைந்தபட்சம் அவரை 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்து இருக்கலாம். அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை என்று பின்னர் வருத்தப்படவும் செய்யலாம் . குல்தீப் யாதவ் நன்றாக செயல்பட்டு வருகிறார். ஆனால் சாஹல் சுழற் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகலங்களிலும் பந்து மெதுவாக திரும்பும் ஆடுகளிலும் மிகவும் அபாயகரமானவர்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஹர்திக் பாண்டியாவை மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இந்தியா பயன்படுத்தலாம். அதனால் யுஸ்வேந்திர சாஹலை அணியில் தேர்வு செய்து இருக்கலாம்” என்று கூறினார். மேலும் “ஜஸ்ப்ரீத் பும்ரா மீண்டும் அணியில் திரும்பி இருப்பது வேகப்பந்து வீச்சுக் கூட்டணியை வலுப்படுத்தி இருக்கிறது. ஆசியக் கோப்பைக்கு முன்பாக வீரர்களின் காயம் குறித்து எனது கவலையை தெரிவித்திருந்தேன். தற்போது இந்தியா ஆசிய கோப்பையை வென்றிருக்கிறது என்றாலும் அதன் காரணமாக உலக கோப்பையை வெல்லும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது. உலகக்கோப்பை போட்டியில் முழு திறனுடன் விளையாட வேண்டும் அப்போதுதான் உலகக்கோப்பையை வெல்ல முடியும்” ஆசிய கோப்பை வெற்றியின் மூலம் இந்திய அணி நல்ல ஃபார்மில் இருக்கிறது” என்று கூறி முடித்தார் யுவராஜ் சிங்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles