12 நிமிடத்தில் கங்குலி மெசேஜ்.. இந்திய அணியை சீண்டிய மைக்கேல் வாகனுக்கு சரியான பதிலடி.. என்ன நடந்தது.?

இந்திய அணி ஆஸ்திரேலியாலின் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.இந்நிலையில் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக இந்தியா 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடையும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அவரது பதிவிற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ யின் முன்னாள் தலைவர்மான சவுரவ் கங்குலி பதிலடி கொடுத்திருக்கிறார். முன்னதாக இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தங்களது சொந்த மண்ணில் வைத்து 0-3 என்ற கணக்கில் இழந்தது. மேலும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் என்ற மோசமான சாதனையையும் இந்திய கிரிக்கெட் அணி படைத்தது. இது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்தியா அந்தத் தொடரிலும் படுதோல்வி அடையும் என பலரும் தங்களது கருத்தை தெரிவித்து இருந்தனர். மேலும் இந்திய அணியை தொடர்ந்து விமர்சித்து வரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன், இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் இழக்கும் என தனது கணிப்பை தெரிவித்திருந்தார். எனினும் உலகின் வேகமான ஆடுகளமான பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது.

- Advertisement -

முன்னதாக இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் எடுத்து அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்தியா 487 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து 534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 238 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனிற்கு மெசேஜ் செய்த சௌரவ் கங்குலி, ஹாய் மைக்கேல் என்னுடைய கணிப்பு சரியாக இருக்கிறது பார்த்தீர்களா.? என தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக பதிலளித்துள்ள வாகன், சவுரவ் கங்குலிக்கு மீண்டும் பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக கிளப் ப்ரேரி பையர் என்ற நிகழ்ச்சியில் பேசிய வாகன் இப்போதும் நான் கூறியது தான் நடந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது குறித்து விரிவாக பேசிய வாகன், பெர்த் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் எனது நண்பர் கங்குலி மெசேஜ் அனுப்பி இருந்தார். அதில் ஹாய் மைக்கேல் நான் கணித்தது போலவே இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என தெரிவித்திருந்தார். போட்டி தொடங்கியது வெள்ளிக்கிழமை ஆனால் சனிக்கிழமை அதிகாலை 5.13 மணிக்கு அவர் எனக்கு இந்த செய்தியை அனுப்பினார். நான் இப்போதும் சொல்கிறேன் என்னுடைய கணிப்பு சரியாக இருக்கிறது. நான் 1-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடையும் என்று கூறியிருந்தேன். நான் சொன்ன அந்த ஒரு வெற்றி தற்போது கிடைத்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles