இந்திய அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள நிலையில் இதற்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து அவரது தந்தை விசுவநாத் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடருக்குப் பிறகு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டது. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்று சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இடம் பெறவில்லை.
சாம்சன் விஜய் ஹசாரே ட்ராபிக்கு முன்னதாக கேரள கிரிக்கெட் சங்கம் நடத்திய பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து விளக்கம் கேட்டதற்கு சரியான பதிலை அளிக்காத காரணத்தால் கேரள கிரிக்கெட் சங்கத்தை கோபமடைய வைத்திருக்கிறது. அவர் விஜய் ஹசாரே டிராபிக்கான அணியில் இடம்பெறவில்லை. இதன் எதிரொலியாக அடுத்ததாக நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணிக்காக அவர் விளையாடாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த விஷயம் குறித்து சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விவாக கூறும்போது “என் மகனுக்கு எதிராக கேரள கிரிக்கெட் சங்கத்தில் உள்ள சிலர் வேலை செய்கிறார்கள் நாங்கள் இதற்கு முன்பாக கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு எதிராக எதுவுமே பேசவில்லை. இந்த சிக்கல் முன்பே இருந்த நிலையில் இப்போது அது அதிகமாகி விட்டது. அந்த குறிப்பிட்ட பயிற்சி வகுப்புக்கு என் மகனைத் தவிர வேறு சிலரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் எல்லாம் அதற்குப் பிறகு மேற்கொண்டு விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:இனி போனா திரும்ப வராது.. வாய்ப்பு வரும் போது எடுக்கணும்.. இந்திய அணி கம்பேக் குறித்து ஷமி உருக்கம்
ஆனால் இப்போது என் மகன் மட்டுமே விளையாடாமல் இருக்கிறார். இது கேரளா கிரிக்கெட் சங்கத் தலைவர்கள் ஜார்ஜ் மற்றும் செயலாளர் வினோத் பற்றியது கிடையாது. என் மகனுக்கு எதிராக சிலர் அங்கே வேலை செய்கிறார்கள். நாங்கள் விளையாட்டு வீரர்கள். என் மகனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வாய்ப்பை தான் நாங்கள் கேட்கிறோம். வேறு எதுவும் கிடையாது மேலும் இதில் கலந்துகொண்டு ஏதாவது பேச வேண்டி இருந்தால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்”என்று கூறி இருக்கிறார்.

