சிஎஸ்கே அணிக்கு வரும் சஞ்சு சாம்சன்.. உறுதி செய்த டிரெய்னர் ராஜாமணி

ராஜஸ்தான் அணியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அந்த அணியில் இருந்து  வெளியேற கேப்டன் சஞ்சு சாம்சன் முடிவு எடுத்துள்ளார். இதன்பின் சஞ்சு சாம்சனை வாங்குவதற்காக பல்வேறு அணிகளும் டிரேட் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு செல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். 

- Advertisement -

இறுதியாக சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான டிரேட் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. ராஜஸ்தான் அணிக்கு செல்ல சஞ்சு சாம்சன் ஒப்புக் கொண்டதால், சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வருவதாக தெரிய வந்துள்ளது. இதனை ராஜஸ்தான் அணியின் டிரெய்னரும், சஞ்சு சாம்சனின் நண்பருமான ராஜா மணி உறுதி செய்துள்ளார். 

- Advertisement -

அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சு சாம்சனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள ராஜா மணி, அருணாச்சலம் படத்தின் சிங்கம் ஒன்று பாடலையின் பின்னணியில் பதிவிட்டுள்ளார். அதேபோல் சிங்கம் கர்ஜிக்க தயார் என்றும் எழுதி இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் வருவது உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles