ஆஸி டெஸ்ட்.. தவறை திருத்தாத விராட் கோலி.. பேட்டிங் கோச் என்ன செய்றாரு.. சஞ்சய் மஞ்சுரேக்கர் கேள்வி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது பிரிஸ்பேனில் நடைபெற்ற வருகிறது. இந்த சூழ்நிலையில் முதல் இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறி வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் விராட் கோலி ஆட்டம் இழந்த விதம் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். அதாவது ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளை விளையாட முயற்சி செய்து தொடர்ச்சியாக ஆட்டம் இழந்து வந்தார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

பேட்டிங் பிரச்சனையை சரி செய்து விட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்குப் பிறகு நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்கு திரும்பவும் விளையாட முயற்சித்து ஆட்டம் இழந்து வருகிறார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரின் பங்கு என்ன என்பது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணியில் பேட்டிங் பயிற்சியாளரின் பங்களிப்பு என்ன என்பதை ஆராய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக ஒரே முறையில் ஆட்டம் இழந்து வருகிறார்கள். இந்த பிரச்சனை ஏன் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என்று புரியவில்லை” என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

இதையும் படிங்க:எனக்கு ரொம்ப வருத்தம்பா.. அந்த பையன ஆஸ்திரேலியா கூட்டிட்டு போகாதது.. இடது கையிலேயே விக்கெட் எடுத்திருப்பான் – ரெய்னா பேட்டி

இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரது கருத்துக்கு “தனது பேட்டிங்கை விராட் கோலி மேம்படுத்தாமல் சாதாரண முறையில் மேலும் பிடிவாதமாக தனது டெக்னிக்கை மாற்றிக் கொள்ளாமல் விளையாடி வருகிறார். மேலும் விராட் கோலி தனது தவறுகளை திருத்திக் கொள்வது போல தெரியவில்லை. இனியும் இதே போன்று நிகழ்ந்தால் அவரை இந்திய அணியில் இருந்து நீக்குவதை தவிர வேறு வழி இல்லை” என்று ரசிகர்கள் அவரது கருத்துக்கு பதில் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழையால் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles