எனக்கு ரொம்ப வருத்தம்பா.. அந்த பையன ஆஸ்திரேலியா கூட்டிட்டு போகாதது.. இடது கையிலேயே விக்கெட் எடுத்திருப்பான் – ரெய்னா பேட்டி

பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் இடம் பெறுவது குறித்து பேச்சுவார்த்தையானது இந்திய தரப்பில் நடைபெற்றது. இருப்பினும், இறுதியில் இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை, அதற்குப் பதிலாக, ஹர்ஷித் ராணா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

இந்த முடிவை குறித்து, இந்தியாவின் முன்னாள் நட்சத்திர பேட்டர் சுரேஷ் ரெய்னா “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-2025 டெஸ்ட் தொடருக்காக அர்ஷ்தீப் சிங் ஆஸ்திரேலியா சென்று இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும்:

சுரேஷ் ரெய்னா கூறுகையில், “நீண்ட நாளுக்குப் பிறகு வட இந்தியாவை சேர்ந்த மிக உயரமான வேகப்பந்து பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங்கை பார்த்தேன். அவர் 6.4 அடி கொண்டவர், அவர் ஸ்விங் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் ஆகிய இரண்டுமே நன்றாக வீசுகிறார். பந்துவீசும்போது அவர் தனது முழு சக்தியையும் அளிக்கிறார். எனது இதயத்திலிருந்து நான் கூறுவது என்னவெனில், அர்ஷீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்”.

- Advertisement -

தனித்துவமான பந்துவீச்சாளர்:

“அவருக்கு சிவப்பு பந்து விளையாடுவதற்கான ஒரு தனித்துவமான அங்கிள் முறையை அவர் பெற்றுள்ளார். அப்படிப்பட்ட தனித்துவமான அங்கிளை பெற்றவர்களாக முன்னர் ஜஹீர் கான், அஷீஷ் நெஹ்ரா, ஆர்.பி. சிங், வசீம் அக்ரம் ஆகியோர் இருந்தார்கள். அர்ஷ்தீபின் மணிக்கட்டின் நிலை மற்றும் அவரின் செயல் திறன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்றார் போல் இருக்கிறது” என்று ரெய்னா கூறினார்.

இரண்டு பந்துகளிலும் பரிசோதனை செய்ய வேண்டும்:

“அவர் கண்டிப்பாக ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்று இருக்க வேண்டும். ஏனென்றால் இனி பெரிய தொடர்கள் நடைபெற இருக்கின்றன. இனி இந்திய அணி இங்கிலாந்து செல்ல உள்ளது. புதிய பந்து மற்றும் பழைய பந்தின் மூலம் அவர் விக்கெட் பெறுவதில் அது பயனுள்ளதாக இருக்கும்” என்று ரெய்னா மேலும் கூறினார்.

- Advertisement -

அர்ஷ்தீப் சிங், இந்தியாவின் T20 உலகக் கோப்பை 2024 பட்டத்தை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். 60 போட்டிகளின் குறிப்பிடத்தக்க குறுகிய கால இடைவெளியில், அவர் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், T20I வரலாற்றில் இந்தியாவின் மிக வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளராக இருந்துள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் ஃபசல்ஹாக் ஃபாரூக்கியுடன் இணைந்து 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles