ஒரே போட்டியில் 9 விக்கெட்.. புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா.. பவுலிங்கில் நிரூபித்த சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் கேப்டன் திம்மாப்பையா நினைவு கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். கோவா அணிக்காக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேசன் 11 அணிக்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் கோவா அணி இன்னிங்ஸ் வெற்றி பெற காரணமாக அமைந்துள்ளார் .

- Advertisement -

இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் சீசன் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. ரஞ்சி டிராபி தொடங்க இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் அசோசியேசனும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் தேசிய அளவிலான கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகின்றன. சமீபத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் சார்பாக தேசிய அணிகள் பங்கு பெற்ற புச்சிபாபு கிரிக்கட் தொடர் நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பாக கேப்டன் திம்மாப்பையா நினைவு கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் கோவா மற்றும் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேசன் 11 அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கர்நாடகா அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 189 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி கோவா அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி 36.5 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கோவா அணியின் சார்பாக பந்துவீச்சில் அர்ஜுன் டெண்டுல்கர் 13 ஓவர்கள் வீசி 41 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த கோவா அணி தங்களது முதல் இன்னிங்சில் 413 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் அபினவ் தேஜ்ரானா 109 ரன்களும் மந்தன் குட்கர் 69 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய கர்நாடகா அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 46 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தினார். இவரது திறமையான பந்துவீச்சால் கோவா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 189 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டி தொடரின் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து 26.3 ஓவர்கள் வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 87 ரன்கள் விட்டுக் கொடுத்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன் அர்ஜுன் டெண்டுல்கரின் சிறப்பான பந்துவீச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதேபோன்று ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் அர்ஜுன் சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அர்ஜுன் டெண்டுல்கர் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்பதால் அவர் சிறப்பாக செயல்பட்டால் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்ப்பார் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

அவரது தந்தையான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்தவர். கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். இதனால் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் வல்லுனர்களும் சமூக வலைதளத்தில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அடுத்த வாரம் தனது 25வது பிறந்த நாளை கொண்டாடும் அர்ஜுன் டெண்டுல்கர் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் 3 வடிவங்களிலும் 49 போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 68 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். மேலும் 13 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles