SA vs NED.. 38 ரன்கள்.. சவுத் ஆப்பிரிக்காவை அப்செட் செய்த நெதர்லாந்து.. 3 உலகக் கோப்பைகளுக்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றி.!

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலகக்கோப்பை தொடரின் பதினைந்தாவது போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் தர்மசாலாவில் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

மழை காரணமாக போட்டி தொடங்குவதற்கு தாமதமானதால் 43 ஓவர்களை கொண்டதாக இந்தப் போட்டியை நடைபெற்றது. தென்னாபிரிக்கா அணி வீரர்களின் அபார பந்துவீச்சில் நெதர்லாந்து அணியின் வீரர்களான விக்ரம்ஜித் சிங் 2 ரன்களிலும் மேக்ஸ் டோவ்ட் 18 ரன்களிலும் ஆக்கர்மேன் 13 ரன்களிலும் பஸ் டி லீட் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க 50 ரன்கள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நெதர்லாந்து.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அந்த அணியின் ஸிப்ராண்ட் ஏங்கெல்ப்ரெக்ட் 19 ரன்களில் அவுட் ஆக ஒரு கட்டத்தில் 82 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து கேப்டன் எட்வர்ட்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார் நிதமனூறு இவர் இருபது ரன்களில் ஆட்டம் இழந்த போது நெதர்லாந்து அணி 112 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. அடுத்து ஆட வந்த வான் பீக் 10 ரன்களில் வெளியேற 140 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நெதர்லாந்து.

- Advertisement -

ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பாக நின்று ஆடிய கேப்டன் எட்வர்ட்ஸ் அரை சதம் எடுத்தார். இவருடன் அதிரடியாக ஆடிய வான் டெர் மெர்வே 19 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய ஆரியன் தத் ஒன்பது பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கேப்டன் எட்வர்ட்ஸ் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 69 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்திருந்தார், இவர்களது சிறப்பான ஆட்டத்தால் நெதர்லாந்து அணி 45 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 245 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சில் ரபாடா,யான்சன், இங்கிடி மற்றும் கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர்கள் ஆரம்பம் முதலே நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் திணறினர். முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் எடுத்த குவின்டன் டிகாக் இருபது ரன்களிலும் கேப்டன் பவுமா 18 ரன்களிலும் ஆட்டம் இழக்க வாண்டெர் டசன் 4 ரன்களிலும் மார்க்ர்ம் 1 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். தென்னாப்பிரிக்க அணிக்கு ஓரளவு நம்பிக்கை அளித்த கிளாஸன் 28 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து யான்சன் 9 ரன்களில் அவுட் ஆகி வெளியேற அந்த அணியின் மொத்த நம்பிக்கையும் மில்லர் மேல் விழுந்தது.

- Advertisement -

தனது அணியை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று போராடிய மில்லர் 52 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த போது தென்னாப்பிரிக்க அணியின் மொத்த நம்பிக்கையும் தகர்த்தது. இறுதிவரை போராடிய கேசவ் மகராஜ் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இங்கிடி 24 பந்துகளில் 7 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 27 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி நெதர்லாந்து அணி இடம் 38 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் வான் பீக் மூன்று விக்கெட்டுகளும் வான் டெர் மெர்வே, பஸ் டி லீட் மற்றும் வான் மீகெரென் ஆகியோர் தல இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன் மூலம் நெதர்லாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இது நெதர்லாந்து அணி உலக கோப்பைகளில் பெறும் மூன்றாவது வெற்றியாகும். மேலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பை போட்டிகளில் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது நெதர்லாந்து. இதற்கு முன்பு 2007 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அந்த அனீஸ் காட்டுல அந்த அணியை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles