14 ஃபோர்ஸ்.. 11 சிக்ஸ்.. 200 ஸ்ட்ரைக் ரேட்.. என்னயா டீம்ல எடுக்க மாட்டீங்க.. இருங்க பாய் ருதுராஜ் மாஸ் பேட்டிங்.. பிசிசிஐக்கு தரமான பதிலடி

சர்வதேச கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய தொடரான சையத் அலி முஸ்தாக் கோப்பைக்கான டி20 தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது விஜய் ஹசாரே 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

இந்தத் தொடரின் இரண்டாவது சுற்றில் இன்று நடைபெற்ற போட்டியில், குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள மகாராஷ்டிரா மற்றும் சர்வீஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி மும்பையிலுள்ள சரத் பவர் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சர்வீஸ் அணியின் வீரர்கள், மகாராஷ்டிரா அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுககளை இழந்து வெளியேறினர்.

- Advertisement -

சர்வீஸ் அணியின் கேப்டன் மோஹித் அஹ்லவாத் மட்டும் ஓரளவிற்கு தாக்கு பிடித்து விளையாடி அரை சதமெடுத்தார். அவர் 64 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருக்கு அடுத்தபடியாக புணியா 26 ரன்கள் மற்றும் அர்ஜுன் சர்மா 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் சர்வீஸ் அணி 48 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மகாராஷ்டிரா அணியின் பந்துவீச்சில் பிரதீப் தத்தே மற்றும் சத்தியஜீத் பச்சாவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். மேலும் முகேஷ் சௌத்ரி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மகாராஷ்டிரா அணிக்கு அந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் மிகச் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தார். ஆரம்பம் முதலே தனது பாணியில் அதிரடியாக விளையாடிய அவர் முதல் 10 ஓவர்களிலேயே தனது அரை சதத்தை கடந்தார். அதன் பிறகும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ருத்ராஜ் கெய்க்வாட் லிஸ்ட் ஏ போட்டிகளில் மற்றுமொரு சதத்தை பதிவு செய்தார். ருத்ராஜின் அதிரடி காரணமாக மகாராஷ்டிரா அணி 20.2 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து தங்களது வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய ருத்ராஜ் கெய்க்வாட் 74 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 148 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் அவர் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு உறுதுணையாக விளையாடிய சித்தேஷ் வீர் 28 பந்துகளில் 22 ரன்களுடன் நாட் அவுட்டாக களத்தில் இருந்தார். உள்நாட்டு கிரிக்கெட் தொடர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு இந்திய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

மேலும் அவருக்கு வழங்கப்பட்ட ஒரு சில வாய்ப்புகளையும் மிகச் சரியாக பயன்படுத்தி ரன்கள் குவித்திருக்கிறார். இறுதியாக ஜிம்பாவே அணியுடன் நடைபெற்ற டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். அந்தத் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு அரை சதமெடுத்தார். எனினும் அதனை தொடர்ந்து நடைபெற்ற கிரிக்கெட் போட்டி தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றபோதும் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக டி20 போட்டிகளில் விளையாடி வந்தனர்.

தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தேதி நெருங்கி வரும் நிலையில் ருத்ராஜ் கெய்க்வாட் மீண்டும் பார்முக்கு திரும்பி இருப்பது தன்னை அணியில் சேர்க்காத பிசிசிஐ நிர்வாகத்திற்கு அவர் கொடுத்த பதிலடி என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ருத்ராஜ் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்தியாவின் ஒருநாள் அணியில் சிறப்பாக விளையாடாத வீரரை நீக்கிவிட்டு கெய்க்வாட்டிற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற ஆதரவு குரல்களும் வரத் தொடங்கியிருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles