கில்லை விட திறமை இருந்தும்..சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பே கிடைக்கல.. ஆனா கில்லுக்கு துணை கேப்டன் பதவி.. கோபத்தில் ரசிகர்கள்

இந்திய அணி அடுத்ததாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று டி20 தொடருக்கும் ஒரு நாள் தொடருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

டி20 கேப்டன் ஆக சூரியகுமார் யாதவ் அறிவிக்கப்பட்ட நிலையில், துணை கேப்டனாக கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு நாள் தொடருக்கும் கில் துணை கேப்டனாக இருக்கும் நிலையில் அவரைவிட ருத்ராஜ் புள்ளி விவரத்தில் நன்றாக இருந்தும் அணியில் கூட தற்போது ருத்ராஜூக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற நிலையில் அதற்கு அடுத்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் சுப்மான் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் பிளேயிங் லெவனில் ருத்ராஜூக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தது. கில்லை விட ருத்ராஜ் நன்றாகவே பேட்டிங் செய்திருந்தார்.
பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டும் கில்லை விட இவருக்கு நன்றாகவே இருந்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கு துணை கேப்டனாக கில் அறிவிக்கப்பட்ட நிலையில், ருத்ராஜ்க்கு அணியில் கூட இடம் தராதது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருநாள் தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் திரும்பிய நிலையில் ரோகித் சர்மா கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

டி20 தொடருக்கு ஏற்கனவே ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பையில் துணை கேப்டனாக இருந்த நிலையில், சூரியகுமார் யாதவ் இலங்கை தொடருக்கான டி20 அணியில் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த இரு தொடர்களுக்குமே கில் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய அணி இவரையே எதிர்கால கேப்டன் ஆக பார்க்கிறது.

- Advertisement -

சர்வதேச t20 கிரிக்கெட்டை பொருத்தவரை ருத்ராஜ் 20 போட்டிகளில் 40 ரன்கள்ஆவரேஜில் 143 ஸ்ட்ரைக் ரைட்டில் நான்கு அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் மொத்தமாக 633 ரன்கள் குவித்திருக்கிறார். அதே வேளையில் சுப்மான் கில் 19 போட்டிகளில் விளையாடி 30 ரன்கள் ஆவரேஜில் 139 ஸ்ட்ரைக் ரேட்டில் மூன்று அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 505 ரன்கள் குவித்திருக்கிறார்.

இதையும் படிங்க:விவாகரத்தை அறிவித்த ஹர்த்திக் பாண்டியா.. 2 முறை திருமணம் செய்தும் இப்படியாகிருச்சே.. வருத்தத்தில் ரசிகர்கள்

கில்லை விட ருத்ராஜ் நன்றாக விளையாடிய போதும், இந்திய நிர்வாகம் கில்லுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல் துணை கேப்டனாகவும் ஆக்கியிருக்கிறது. இதுதான் தற்போது ரசிகர்களை கோபமூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. இனி ருத்ராஜூக்கு அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும் அது இனி இவருக்கு சம்பிரதாய போட்டியாகவே பார்க்கப்படும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles