இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நேற்று அதிகாரப்பூர்வமாக தனது விவாகரத்தினை அறிவித்தார். ஏற்கனவே இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே விரிசல் என்று கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக இருவரும் தங்கள் சமூக வலைதளத்தில் விவாகரத்தினை அறிவித்து இருக்கின்றனர்.
இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் தற்போது தங்கள் வருத்தத்தினை தெரிவித்து வருகின்றனர்.
2018ஆம் ஆண்டில் தான் முதல்முறையாக ஹர்திக் பாண்டியா மற்றும் செர்பிய மாடலான நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோர் முதன் முறையாக சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில் 2020ஆம் ஆண்டு இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அப்போது ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் நிலையான இடம் பிடித்திருக்கவில்லை. அந்த நிச்சயதார்த்தமானது குடும்பம் மற்றும் நண்பர்கள் என யாரும் இன்றி கப்பலில் கடலுக்கு நடுவே இருவரும் மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் இவர்களது திருமணம் 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் குஜராத்தில் அவர்களது வீட்டில் மிகவும் எளிய முறையிலேயே நடைபெற்றது. திருமணம் முடிந்து சில நாட்களிலேயே தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக நடாஷா மற்றும் ஹர்த்திக் ஜோடி அறிவித்தனர். அதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் அகஸ்தியா என்ற மகன் பிறந்துள்ளார். அதன் பிறகாக 2023 ஆம் ஆண்டு மீண்டும் பல கோடிகள் செலவு செய்யப்பட்டு இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இது இரண்டாவது முறை செய்யப்பட்ட திருமணம் ஆகும். இப்படி நன்றாக போய்க் கொண்டிருந்த திடீரென்று இவர்களது வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நட்டாஷா தனது சமூக வலைதளத்தில் ஹர்திக் பாண்டியாவின் புகைப்படங்களை நீக்கினார். அப்போது பார்ம் அவுட்டில் இருந்த ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம்பெறுவதற்காக கடுமையான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஹர்திக் பாண்டியா தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே சமூக வலைதளங்களில் இருவருக்கும் இடையே விரிசல் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக இவர்களின் விவாகரத்து அமைந்துள்ளது.
இதையும் படிங்க:இலங்கைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. டி20 அணிக்கு புதிய கேப்டன்.. ரோஹித் கோலி வருகை
ஆனால் இவர்கள் இருவரும் தங்கள் மகன் அகஸ்தியாவுக்காக அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இரண்டு முறை திருமணம் செய்தது விவாகரத்து செய்வதற்கா? என்று ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். தற்போது அவரது மகன் அகஸ்தியா தாயார் நட்டாஷாவுடன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

