நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்திருந்தது. இலக்கை துரத்திய குஜராத் அணி 20 ஓவர்களில் 143 ரன்கள் குவிக்க முடிந்தது. இதனால் இரண்டாவது போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது சென்னை அணி.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், குஜராத் அ அணியின் கேப்டன் கில் சென்னை அணியிணை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.இதன்படி சென்னை அணி ரச்சின் ரவிந்த்ரா மற்றும் கேப்டன் கெய்க்வாட் ஆகியோரின் உதவியுடன் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் குவித்தது. 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்த ரச்சின் ரவீந்திரா ஆட்டம் இழந்தார்.
அதற்குப் பிறகு களம் இறங்கிய ரகானே 12 ரன்களில் ஆட்டம் இழக்க, மிடில் ஆர்டரில் களம் இறங்கி அதிரடியாக விளையாடிய சிவம் தூபே 51 ரன்கள் குவித்து சென்னையின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் இறுதிக்கட்டத்தில் இளம் வீரர் சமீர் ரிஸ்வி ரசீத்கானின் ஓவரில் இரண்டு அற்புதமான சிக்ஸர்களை விலாச முடிவில் சென்னை அணி 206 ரன்கள் குவித்தது.
பின்னர் இலக்கை துரத்திய குஜராத் அணி சென்னை அணி வீரர்களின் அபார பந்துவீச்சினை தாக்குப்பிடிக்க முடியாமல் எட்டு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் குவிக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்று புள்ளி பட்டியல் தற்போது முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இந்த வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கூறுகையில்
“இன்றைய ஆட்டத்தில் எங்கள் அணியின் பேட்டிங், பந்து வீச்சு, ஃபீல்டிங் என அனைத்துமே சிறப்பாக இருந்தது. குஜராத் போன்ற ஒரு அணிக்கு எதிராக இந்த மூன்றுமே கட்டாயம். மைதானம் முதலில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. டாஸ் வென்று எதைத் தேர்வு செய்தாலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று மட்டுமே உறுதியாக இருந்தேன். இங்கு இறுதியில் விக்கெட் இருந்தால் சிறப்பாக ரன்கள் குவிக்க உதவுகிறது.
இதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். ரச்சின் ரவீந்திரா பவர் பிளேவில் மிக அற்புதமாக பேட்டிங் செய்தார். சிவம் துபே நேற்றைய போட்டியில் அபாரமாக விளையாடினார். அவர் மீது மகி பாயும், சென்னை அணி நிர்வாகமும் நம்பிக்கை வைத்து தனிப்பட்ட முறையில் அவருடன் பணிபுரிகிறது. அவர் தனது பொறுப்பு என்ன என்பதை நன்கு அறிகிறார். பீல்டிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டார்” என்று கூறுகிறார்.
இதன் மூலம் சென்னை மைதானத்தில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது சூப்பர் கிங்ஸ். சொந்த மைதானத்தில் பெற்ற வெற்றிக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வி அடைந்திருக்கிறது குஜராத் அணி. எனவே அடுத்த போட்டியில் புதிய உத்வேகத்துடன் களமிறங்கி வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.

