ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் அந்த அணியின் நிர்வாகிகள் இடையில் மோதல் ஏற்பட்டது. ரியான் பராக்கை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்த செயல் சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் டிராவிட் இருவரையும் கடுப்பேற்றியது. இதனால் ராகுல் டிராவிட் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், சஞ்சு சாம்சன் தன்னை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆனால் ஐபிஎல் மினி ஏலத்தில் சஞ்சு சாம்சனுக்கு நிகரான வீரர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால், அவரை டிரேட் செய்ய ராஜஸ்தான் அணி முடிவு செய்தது. அதன்பின் சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே அணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது, ராஜஸ்தான் அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட், டிவால்ட் பிரெவிஸ் உள்ளிட்டோரை கேட்டுள்ளனர்.
இதனால் சிஎஸ்கே அணி பேச்சுவார்த்தையில் இருந்து விலகியது. இதையடுத்து ராஜஸ்தான் அணி கேகேஆர், டெல்லி, லக்னோ உள்ளிட்ட அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் சஞ்சு சாம்சன் தன்னை சிஎஸ்கே அணியுடன் மட்டுமே டிரேட் செய்ய வேண்டும்.. இல்லையென்றால் மினி ஏலத்தில் ரிலீஸ் செய்யுங்கள் என்று தெரிவித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் சிஎஸ்கேவின் டிமாண்டை ராஜஸ்தான் அணி ஏற்றுள்ளதாக தெரிகிறது.

