தோத்தாலும் மீசைய முறுக்கு.. ODI ரேங்கிங்கில் கோலி இடத்தை தூக்கிய ரோகித்.. புது உச்சம் தொட்ட ஹிட்மேன்.. பாபரின் நம்பர் 1 இடத்திற்கும் பிரச்சனை

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடர் நேற்றைய போட்டியுடன் நிறைவடைந்துள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் 27 ஆண்டுகள் இந்தியாவிடம் தோல்வியடைந்ததற்கு இலங்கை அணி பழி தீர்த்துள்ளது. இந்நிலையில் ஐசிசி கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தப் பட்டியலில் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் கேப்டன் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். ஐபிஎல் மற்றும் உலக கோப்பையை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பரவலாக நடைபெற்று வருகிறது. இந்தியா உலகக்கோப்பை வெற்றியை தொடர்ந்து ஜிம்பாப்வே மற்றும் இலங்கை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. டி20 போட்டிகளில் விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த இந்தியா 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடியது. இலங்கை சுற்றுப் பயணத்திற்காக, ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த இந்திய வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பினர். புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையில் இந்தியா, இலங்கை சுற்றுப்பயணத்தை தொடங்கியது. 2023 ஆம் வருட உலகக் கோப்பை இந்திய அணியில் விளையாடிய ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் இந்திய அணிக்கு திரும்பினர்.

- Advertisement -

இந்தத் தொடரில் இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நடந்து முடிந்த 3 ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணியில் அதிகபட்ச ரன்களை எடுத்த வீரராக இருந்தார். இதன் காரணமாக தற்போது வெளியாகி இருக்கும் ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

2022 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் இடம் பெற்றிருக்கிறார். இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். இவரை விட 61 புள்ளிகள் மட்டுமே பின் தங்கியிருக்கும் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடாத போதும் 781 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் .

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ரன் குவிக்க தவறிய இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து அயர்லாந்து அணியின் ஹாரி டெக்டர் ஐந்தாவது இடத்திலும் நியூசிலாந்து அணியின் டேரில் மிச்சல் ஆறாவது இடத்திலும் உள்ளனர். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட அக்சர் பட்டேல் 35 இடங்கள் முன்னேறி 178 வது இடத்தில் இருக்கிறார். மேலும் இலங்கை அணியின் லியாங்கே 10 இடங்கள் முன்னேறி 78 வது தரவரிசையில் உள்ளார்.

பாகிஸ்தான் அணியின் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் பாபர் அசாம் 824 புள்ளிகள் உடன் முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா, பாபர் அசாமை விட 61 புள்ளிகள் மட்டுமே பின் தங்கி இருக்கிறார். வர இருக்கின்ற போட்டிகளில் ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக செயல்பட்டால் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் பாபர் அசாமின் முதல் ரேங்கிற்கான இடம் தற்போது பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள வீரர்களின் பட்டியல்:

  1. பாபர் அசாம்
    1. சுப்மன் கில்
    2. ரோஹித் சர்மா
    3. விராட் கோலி
    4. ஹாரி டெக்டர்
    5. டேரில் மிட்செல்
    6. டேவிட் வார்னர்
    7. டேவிட் மலான்
    8. பதும் நிசாங்கா
    9. ரசி வாண்டார் டுசன்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles