டி20 உலக கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் அதை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாட மும்பை வான்கடே மைதானத்தில் அதற்கான நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது மைதானத்தில் இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்தது காண்போர்களிடையே மகிழ்வான தருணங்களை ஏற்படுத்தியது.
இந்த டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியாவின் பங்கு மிகப் பெரியது என்றுதான் கூற வேண்டும். அதுவும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஐந்து ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையிலும், அவர் முக்கியமான இரண்டு ஓவர்களை வீசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மும்பை கேப்டன் ஆன பிறகு அவருக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிடத் தொடங்கிய நிலையில் அதே மும்பை ரசிகர்கள் இன்று ஹர்திக் பாண்டியா உள்ளே நுழைந்தவுடன் அவருக்கான வரவேற்பு வேற லெவலில் இருந்தது.
தனிப்பட்ட முறையில் ஹர்டிக் பாண்டியாவுக்கு இந்த உலகக் கோப்பை வெற்றி மிக முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கியமான விஷயங்களை கூறியிருக்கிறார். இது குறித்து ரோஹித் சர்மா விரிவாக கூறும் பொழுது “இந்தத் தொடரில் ஹர்திக் பாண்டியா எங்களுக்கு முக்கியமான கடைசி ஓவர் வீசினார். அந்தப் போட்டியில் நம் வெற்றி இலக்கு என்பது என்ன என்று அனைவருக்கும் தெரியும். அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மிகச் சிறப்பாக வீசி வெற்றி பெற வைத்த ஹர்திக் பாண்டியாவுக்கு எனது பாராட்டுக்கள்.
குறிப்பாக டேவிட் மில்லர் களத்தில் நின்று கொண்டிருந்த போது நான் லாங் ஆன் திசையிலும், சூர்யா லாங் ஆப்பிலும் நின்று கொண்டிருந்தார். மில்லரை நாங்கள் காற்றுக்கு எதிர் திசையில் விளையாட வைக்க வேண்டும் என்று நினைப்போம். ஏனென்றால் காற்றின் திசையில் சென்றால் பந்து பவுண்டரி லைனை கடந்து விடும் என்று தெரியும். ஆனால் நல்ல வேலையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. சூரியகுமார் பிடித்த கேட்ச் இறுதிப் போட்டியில் முக்கிய பங்காற்றியது.
இதையும் படிங்க:என் வாழ்நாளில் ரோகித்தை நான் அப்படி பார்த்தது இல்லை.. வெற்றி விழாவில் விராட் கோலி உருக்கமான பேச்சு
இதற்காக அவர் நிறைய பயிற்சி எடுத்து இருக்கிறார். முக்கியமான தருணத்தில் அதை நிறைவேற்றுவது என்பது அசாதாரணமான விஷயங்களில் ஒன்று. மும்பை மக்கள் எப்போதுமே வரவேற்பு கொடுப்பதில் தவறவிட மாட்டார்கள். எங்களுக்கு மிக அருமையான வரவேற்பு தற்போது கிடைத்துள்ளது. என் சார்பிலும் என் அணி சார்பிலும் நான் மிகப்பெரிய நன்றியை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்போது மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இந்தத் தருணத்தில் இருக்கிறேன்” என்று கூறுகிறார்.

