” தோனி பேட்டிங்கில் எங்கு ஆடுவார் ? இது கடைசி சீசனா ? எனக்கு கிடைத்த செய்தி இது தான் ” ரசிகர்கள் இதனை எதிர்பார்க்கலாம் – ராபின் உத்தப்பா

மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் 2025, ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு கிரிக்கெட் திருவிழாவை கொண்டு வர உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. மறுதினம் தொடரின் ஆண்டைகள் சென்னை – மும்பை அணிகள் மோதும் பரபரப்பான அனல் பறக்கும் போட்டி நடக்கிறது. ஒரு வருடம் கழித்து தோனியைப் பார்க்கும் ஆரவாரதில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தில், செவ்வாய்க்கிழமை நடந்த நெட் சேஷனில், தோனி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். அணியின் ஸ்டார் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானாவின் யார்க்கரை, தனது பிரபலமான ஹெலிகாப்டர் ஷாட் மூலம் பவுலரின் தலைக்கு மேல் சிக்ஸருக்கு விரட்டினார். இந்த வீடியோ ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியிடம் இருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி ராபின் உத்தப்பா பேசியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, ” தோனியைப் பொறுத்தவரை, அவர் கடந்த சீசனைப் போலவே இம்முறையும் 7 அல்லது 8வது இடத்தில் பேட்டிங் செய்ய பந்து, 12 முதல் 20 பந்துகள் வரை ஆடுவார். குறைந்த பந்துகளில் அதிக ரன்களைத் துரட்டுவதே அவரது பணியாக கருதுகிறார். பிரம்மாண்ட ஷாட்களின் சில தருங்களை அவரிடம் மீண்டும் எதிர்பார்க்கலாம். ” என்று உத்தப்பா கூறினார். மேலும், இது தோனியின் கடைசி சீசனாக இருக்குமா ? என்பதைப் பற்றி உத்தப்பா தன் கணிப்பைத் தந்துள்ளார்.

- Advertisement -

” தோனியின் கிரிக்கெட் மீதான ஆர்வம் ஒருபோதும் குறையாமல் இன்னும் நீடித்துக் கொண்டுள்ளது. அதனால் தான் அவர் இன்னுமும் விளையாடுகிறார். 43 வயதில், ஒரு விக்கெட் கீப்பராக உலகின் வேகமான கைகளை அவர் தான் பெற்றிருக்கிறார். அந்த திறமையும், ஆர்வமும் இருக்கும் வரை, எதுவும் அவரை தடுக்க முடியாது என்று நினைக்கிறேன். இந்த சீசன் முடிவில் அவர் ஓய்வு பெற்றாலும் ஆச்சரியப்பட மாட்டேன். அதே போல இன்னும் நான்கு சீசன்கள் ஆடினாலும் அதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. ” எனப் பேசினார் உத்தப்பா.

குறைந்த பந்துகளே ஆடினாலும் அதில் பவுண்டரியும் சில்சரும் தோனி பறக்கவிடுவது ரசிகர்களுக்கு வானவேடிக்கை விருந்து. தோனியின் ஒவ்வொரு ஷாட்டும், சிஎஸ்கே ரசிகர்களுக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குமே உற்சாகத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles