ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதிலும் கேப்டன் ரிஷப் பண்ட் நம்பர் 7 பேட்ஸ்மேனாக களமிறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லக்னோ அணி செய்த சம்பவம்
2016ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அறிமுகமான போது, நம்பர் 7 பேட்ஸ்மேனாக வந்தார். அதன்பின் தற்போதுதான் நம்பர் 7 பேட்ஸ்மேனாக களமிறங்கி இருக்கிறார். எதற்காக லக்னோ அணி ரிஷப் பண்ட்-ஐ முன்னிலையில் களமிறக்கவில்லை என்பது இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது.
இந்த சூழலில் ரிஷப் பண்ட் நம்பர் 7ல் களமிறங்கியதற்கு இந்திய ஜாம்பவான் புஜாரா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக புஜாரா பேசும் போது, ஃபினிஷர் ரோலில் களமிறங்குவதற்கு ரிஷப் பண்ட் ஒன்றும் தோனி கிடையாது. என்னை பொறுத்தவரை ரிஷப் பண்ட் தோனியை போல் விளையாட முயற்சிக்க கூடாது. அடி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு மிடில் ஓவர்களே சிறந்த தருணம்.
ரிஷப் பண்ட்-க்கு தேவையா?
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனியை போல் கடைசி நேரத்தில் அடிக்கலாம் என்று ரிஷப் பண்ட் காத்து கொண்டிர்ய்ந்தார். அவருக்கு இயற்கையாக வராத ஒரு விஷயத்தை ரிஷப் பண்ட் முயற்சிக்க தேவையில்லை. அதிலும் ஐபிஎல் தொடருக்கு நடுவில் இப்படியொரு பரிசோதனை முயற்சி தேவையே கிடையாது.
ரிஷப் பண்ட் டாப் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது. அவரால் 6 முதல் 15 ஓவர்களில் ரன்களை சேர்க்க முடியும். ரிஷப் பண்ட் ஒன்றும் ஃபினிஷர் அல்ல. தன்னை ஃபினிஷராகவும் ரிஷப் பண்ட் மாற்றக் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

