இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடின் முடித்த நிலையில் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் பயிற்சியின் போது ஹர்திக் பாண்டியா செய்த வேலையால் இந்திய அணி நிர்வாகம் சற்று கதி கலங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று துபாய்க்கு பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது அங்கே பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி முதல் போட்டியாக வருகிற 20ம் தேதி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியை துவங்கிய நிலையில் ஹர்திக் பாண்டியா இன்று தனது பயிற்சியை துவங்க ஆரம்பித்தார்.
அவர் பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவர் அடித்த பந்து ஒன்று அவருக்கு அருகில் பயிற்சி மேற்கொண்டிருந்த ரிஷப் பண்டின் வலது முட்டியை தாக்கியது. ரிஷப் பண்ட் ஏற்கனவே சாலை விபத்தில் சிக்கி தற்போது தான் குணமடைந்து இந்திய அணியில் விளையாடி வருகிறார். அவருக்கு எங்கு காயமானதோ அதே பகுதியில் ஹர்திக் பாண்டியா அடித்த பந்து அவரது முட்டியை தாக்க அவர் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார்.
இதனைப் பார்த்த இந்திய அணி நிர்வாகம் உடனடியாக பதறிப் போய் அவருக்கான முதல் உதவி சிகிச்சைகள் அளித்தது. இதனைக் கண்ட ஹர்திக் பாண்டியா உடனடியாக அவர் அருகே சென்று என்ன ஆனது? நலமாக இருக்கிறாய் தானே? என்று விவாதிக்க தொடங்கி இருக்கிறார். மேலும் அவரது முட்டிக்கு ஐஸ் கட்டி ஒத்தடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு சிறிது நேரத்தில் ரிஷப் பண்ட் மீண்டும் தான் நலமாக இருப்பதாகவும் மீண்டும் பயிற்சிகளை மேற்கொள்ள முடிவதாகவும் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:சென்னை – மும்பை போட்டியில் பாண்டியா விளையாட தடை.. காரணத்தை வெளியிட்டுள்ள பிசிசிஐ ! ரசிகர்கள் ஏமாற்றம்
இதனைக் கேட்ட பிறகு தான் இந்திய அணி நிர்வாகம் சற்று மன நிம்மதி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய அணிக்கு கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக இருக்கும் நிலையில் அவருக்கு அடுத்த கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் மட்டுமே இருப்பதால் அவரது தேவை இந்திய அணிக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்திய அணிக்கு அதற்கு அடுத்த நாள் வங்கதேச அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது

