ஐ.பி.எல் 2025ஆம் ஆண்டுக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. மார்ச் 22 துவங்கும் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகிறது.
தொடரின் ஆண்டைகள் சென்னை – மும்பை மறுதினம் மார்ச் 23 மாலை சேப்பாக் மைதானத்தில் மோதுகின்றனர். 2020 பிறகு இரு அணிகளும் அவர்களது முதல் போட்டியில் மோதிக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பரம்பரை பகையாளிகள் மோதிக் கொள்ளும் முதல் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
எனினும் இந்தப் போட்டியில் ஒரு சுவாரசியம் குறைகிறது மற்றும் அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய பின்னடைவாக அமையும். அதாவது மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரபூர்வமாக உறுதியும் செய்துள்ளனர்.
சென்ற ஆண்டு கடைசிப் போட்டியில் (மே 17) லக்னோ அணிக்கு எதிராக குறைந்த ஓவர் ரேட் காரணமாக கேட்டேன் பாண்டியாவுக்கு 30 லட்சம் அபராதம் போடப்பட்டது. கடந்த சீசனில் மூன்றாவது முறையாக குறைந்த ஓவர் ரேட்டை கடைபிடித்தால் அவருக்கு ஒரு போட்டி தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் போட்டி, இந்த ஆண்டு சென்னை அணியுடன் நடக்கும் முதல் போட்டியாக அமைந்துவிட்டது மும்பை அணிக்கு சோகம்.
அவர் இல்லாத பட்சத்தில் நடப்பு இந்திய டி20ஐ கேப்டன் சூரியகுமார் யாதவ் அணியைத் தலைமைத் தாங்குவார் என்பதில் எவ்வித ஐயமும் தேவையில்லை. பாண்டியா இல்லாத பட்சத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாகத் தான் தெரிகிறது. சேப்பாக்கத்தில் 5 முறை கோப்பை வென்ற அணிகள் சென்னை – மும்பை, ருத்துராஜ் – சூரியகுமார் யாதவ், தோனி – ரோஹித் ஆகிய மோதல் அனல் பறக்கும்.

