மறைக்க எதும் இல்ல.. 30 பந்தில் 30 ரன் தேவை.. பண்ட்செஞ்ச அந்த ஒரு வேலை தான் உலக கோப்பை ஜெயிக்க காரணம் – ரோஹித் சர்மா ஓப்பன் டாக்

கடந்த ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இந்த உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. மேலும் 17 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி வெல்லும் டி20 உலக கோப்பை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கோப்பை வெற்றியை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர்.

- Advertisement -

இந்நிலையில் உலகக்கோப்பை வெற்றி குறித்து பேசி இருக்கும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பரபரப்பான இறுதிப் போட்டியில் ரிஷப் பண்ட் செய்த ஒரு காரியம் இந்திய அணிக்கு சாதகமாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார். ஜூன் மாதம் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகள் இழந்தாலும் அதன் பிறகு சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. அந்த அணியின் வீரர்களான கிளாசன் மற்றும் மில்லர் இருவரும் அதிரடியாக விளையாடி தென்னாப்பிரிக்காவை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றனர். அந்த அணி கடைசி 5 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 6 விக்கெட் கைவசம் இருந்தது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரின் முதல் பந்தில் கிளாஸண் விக்கெட்டை வீழ்த்தினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பந்து வீச வந்த பும்ரா சிறப்பாக வீசி ரன்கள் கட்டுப்படுத்தியதோடு மற்றொரு ஆல் ரவுண்டரான யான்சன் விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் மில்லர் அடித்த பந்தை எல்லை கோட்டிற்கு அருகே மிகச் சிறப்பாக கேட்ச் பிடித்த சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழக்கச் செய்தார். இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி உலகக் கோப்பையையும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நடந்த இறுதிப் போட்டி குறித்து பேசி இருக்கும் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் தனது புத்திசாலித்தனத்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றியதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” போட்டி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. தென்னாப்பிரிக்கா அணி 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டி இருந்தது. பொதுவாக டி20 போன்ற போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருக்கும்போது பந்துகள் தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த நேரத்தில் ஏற்படும் சிறிய தாமதம் ஆட்டத்தின் போக்கை மாற்றி விடும்” என தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் “இந்த நேரத்தில்தான் ரிஷப் பண்ட் தனது புத்தி கூர்மையை பயன்படுத்தினார். நான் பீல்டிங் செட் செய்து கொண்டிருந்தபோது திடீரென ரிஷப் பண்ட் அணியின் பிசியோதெரபிஷ்டை அழைத்தார். அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் அதனை டேப் செய்ய சிறிது அவகாசம் எடுத்துக் கொண்டார். இது போட்டியின் போது சிறிய கால தாமதத்தை ஏற்படுத்தியது” எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து வீசப்பட்ட முதல் பந்தில் கிளாசன் ஆட்டம் இழந்ததையும் ரோகித் சர்மா குறிப்பிட்டார்.

அந்த விக்கெட் விழுந்ததால் தென்னாப்பிரிக்கா அணி அழுத்தத்தை உணர்ந்தது. இதன் காரணமாக அவர்கள் நெருக்கடியில் விளையாட ஆரம்பித்தார்கள். நாம் சிறப்பாக பந்துவீசி ரன்கள் கட்டுப்படுத்தியதோடு விக்கெட்டும் வீழ்த்தினோம். மேலும் நமது அணியின் வீரர்களும் எதிரணியை ஸ்லட்ஜ் செய்ய தொடங்கினார்கள். எப்படியாவது இந்த போட்டியில் வென்று விட வேண்டும். அதனால் நடுவர் மற்றும் போட்டி நடுவர் பற்றி கவலைப்படாதீர்கள். தென் ஆப்பிரிக்க அணி வீரர்களை ஸ்லட்ஜ் செய்யுங்கள் எனக் கூறினேன் என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

ரிஷப் பண்ட் போட்டியை சிறிது தாமதப்படுத்தியதால் மட்டும் இந்தியா வெற்றி பெறவில்லை. நாம் சிறப்பாக விளையாடியதால் தான் வெற்றி பெற்றோம். எனினும் அவர் போட்டியை தாமதப்படுத்தியது நமக்கு மேலும் சாதகமாக அமைந்தது என்று ரோஹித் சர்மா தெரிவித்திருக்கிறார். கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் டி20 உலக கோப்பை வெற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தந்தது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles