இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை மறுநாள் விளையாட உள்ளது. இதற்கான பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக இருக்கின்றனர். இந்திய அணியின் துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் 4 இன்னிங்சில் 2 சதங்கள், ஒரு அரைசதம் உட்பட 342 ரன்களை குவித்திருக்கிறார். அபாரமான ஃபார்மில் உள்ள ரிஷப் பண்ட், இதனை தொடர வேண்டும் என்று பலரும் விரும்பி வருகின்றனர்.
ரிஷப் பண்ட் சீக்ரெட்
இந்த சூழலில் ரிஷப் பண்ட் தொடர்பாக பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் முக்கியமான ரகசியம் ஒன்றை கூறி இருக்கிறார். அதில், ரிஷப் பண்ட் தனது பேட்டிங் மற்றும் பணிகள் குறித்து அதிகமாக பேசக் கூடியவர். என்ன செய்ய போகிறேன், எதை செய்யப் போகிறேன் என்று அதிகமாக சொல்பவர். ஆனால் களத்தில் ரிஷப் பண்ட் பேசவே மாட்டார்.
களத்தில் பேட்டிங் செய்யும் போது அதிகமாக பேசினால், அது ரிஷப் பண்ட் மனநிலையை பாதிக்கிறது. இதனால் சில தவறான முடிவுகளை எடுக்கிறார். அதன்பின் மற்ற பேட்ஸ்மேன்களை பற்றி அதிகமாக பேசக் கூடியவர். ஒவ்வொரு பேட்ஸ்மேன் குறித்தும் சரியாக திட்டத்தை செய்யக் கூடியவர். அப்படியான திட்டம் இல்லாமல், சதங்களை விளாச முடியாது.
சிந்தித்து விளையாடும் வீரர்
ஒவ்வொரு அணியிலும் ஆக்ரோஷமான வீரர்கள் இருக்கின்றனர். அவர்களாலும் சிறப்பாக விளையாடி எதிர் அணியின் மொமண்டத்தை உடைக்க முடியும். ஜெய்ஸ்வாலை எடுத்து கொள்ளுங்கள்.. அவரின் விருப்பப்படி தான் விளையாடுவார். ரிஷப் பண்ட் கட்டுப்படுத்த முடியாதவர்.. அதற்காக யோசிக்காமல் விளையாட மாட்டார்.
அதற்காக அணியை பற்றி யோசிக்காமல் இருக்க மாட்டார். சிந்தித்து முடிவு எடுக்க கூடிய வீரர்தான். ஆனால் அவரின் முடிவு தவறாக முடிவடைந்தால், சோகமாக இருப்பார். அவர் சரியாக ஆடும் போது, மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதேபோல் முகமது சிராஜ்க்கு ரெஸ்ட் தேவையில்லை. அவர் வழக்கமாகவே அதிக ஓவர்களை பவுலிங் செய்து பழக்கப்பட்டவர் என்று தெரிவித்துள்ளார்.

