வீடியோ.. யாரு சாமி நீ.. 24 கோடி ஸ்டார்க் பவுலிங்கை சிதறவிட்ட ரிங்கு சிங்.. யாக்கர்களில் பறந்த சிக்சர்

ஐபிஎல் 2024க்காண கிரிக்கெட் தொடர் வருகிற வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் முதல் போட்டியாக களத்தில் மோத உள்ளன.

- Advertisement -

இதன் தொடக்க விழாவிற்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர். தொடக்க நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்குப் பிறகு அடுத்தடுத்த போட்டிகள் தினமும் நடைபெறுவதால் மீதமுள்ள எட்டு அணிகளும் தற்போது மிகத் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

- Advertisement -

இதன் காரணமாக மற்ற அணி வெளிநாட்டு வீரர்கள் தற்போது அந்தந்த அணிகளில் இணைந்து வருகின்றனர். லக்னோ அணியின் சமர் ஜோசப், சென்னை அணியின் முஸ்தபிகுர் ரகுமான் ஆகியோர் சமீபத்தில் அணியில் இணைந்த வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகியது. சமீபத்தில் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக விலையான 24.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் தற்போது அணியில் இணைந்துள்ளார்.

- Advertisement -

கடந்த சீசனில் கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சில் மிகவும் பின்தங்கி இருந்ததால், எவ்வளவு விலை கொடுத்தாலும் பரவாயில்லை என்று மிட்சல் ஸ்டார்க்கை அணியில் எடுத்தது. காயம் காரணமாக சில வருடங்கள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல் இருந்த மிட்சல் ஸ்டார்க் பின்னர் ஆஸ்திரேலியா அணியில் இணைந்தார்.

விக்கெட்டைகளை எடுக்க முடியாமல் பார்ம் இன்றி தவித்து வந்த அவர், இந்தியாவில் நடைபெற்ற கடந்த உலக கோப்பைத் தொடரில்,சிறப்பான பங்களிப்பை அளித்து ஆஸ்திரேலியா அணி உலக கோப்பைப் பெற முக்கியக் காரணமாக அமைந்தார். அதுபோல தற்போது கொல்கத்தா அணிக்காகவும் சிறப்பாக செயல்படுவார் என்று ரசிகர்களாலும், அணி நிர்வாகத்தாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தற்போது கொல்கத்தா அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரிங்கு சிங், மிட்சல் ஸ்டார்க்கின் பௌலிங்கை வெளுத்து வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்டார்க் பந்து வீசும் போது முதல் பந்தை எதிர்கொண்ட ரிங்கு சிங் ஸ்கொயர் லெக் திசையில் பிரமாதமான ஒரு சிக்சரை பறக்க விட்டார்.

அதன் பிறகு வீசிய இரண்டாவது பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு பௌண்டரியைப் பறக்க விட்டார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட ஸ்டார்க்கின் பந்துவீச்சை, ரிங்கு சிங் சற்று கூட சிரமம் கொள்ளாமல் இவ்வளவு சுலபமாக விளையாடுகிறாரே என்று ரசிகர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொல்கத்தா அணி வருகிற 23ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. எனவே ஸ்டார்க் இந்த ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles