இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், அதற்குப் பிறகு ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இந்த சூழ்நிலையில் பிறகு இரண்டாவது ஆட்டத்திற்கு முன்பாக பயிற்சி போட்டியில் விளையாடிய நிலையில் பயிற்சி ஆட்டத்திலும் மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுமாரான பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்தினார்.
மேலும் இந்த டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் தொடக்க இடத்தில் சிறப்பாக விளையாடி வருவதால் அவரை தொந்தரவு செய்யாமல் ரோகித் ஆறாவது இடத்தில் இறங்கி விளையாடிய நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரோகித் சர்மா மீண்டும் தொடக்க இடத்தில் களமிறங்கி பேட்டிங் ஃபார்ம்க்கு வர முயற்சி செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து பாண்டிங் விரிவாகக் கூறும்போது “என்னை பொருத்தவரை ரோகித் சர்மா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்று கூறுவேன். கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் கூட்டணி முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 201 ரன்கள் குவித்திருக்கலாம். ஆனால் தொடக்க இடத்தில் விளையாடி ரோகித் சர்மா நல்ல அனுபவம் பெற்று இருக்கிறார். அவர் டாப் ஆர்டரில் விளையாட முயற்சி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க:இஷான் கிஷனிடம் இந்த திறமை சுத்தமா இல்லை.. அதுனால தான் அவரை விட்டு பில் சால்ட்டை ஆர்.சி.பிக்கு எடுத்தோம் – தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்
ஏனென்றால் அது அவருடைய இயல்பான ரோல். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் ரோகித் சர்மாவை மீண்டும் துவக்க இடத்தில் களம் இறக்குவது தான். ரோஹித் சர்மா கடைசியாக 12 இன்னிங்ஸ்களில் 142 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். எனவே இதனை கவனத்தில் கொண்டு ரோஹித் சர்மா தனக்கு சாதகமான விஷயங்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும். எனவே கேஎல் ராகுலுக்கு மீண்டும் சிறந்த இடத்தை கண்டுபிடிப்பது அவசியம்” என்று கூறி இருக்கிறார்.

