சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் 2025 ஏலம் குறித்து முன்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் மற்றும் நடப்பு மெண்டாரான தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். பெங்களூர் அணி எதிர்பார்த்தபடி ஏலம் அமைந்ததாக கூறிய அவர் ஏன் இந்திய நட்சத்திரம் இஷான் கிஷனை எடுக்கவில்லை என்பதற்கும் காரணம் கொடுத்துள்ளார்.
பெங்களூர் அணி விராட் கோஹ்லி, ரஜத் பட்டிதார் மற்றும் யாஷ் தயாள் மூன்று வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு 83 கோடிகளுடன் ஏலத்திற்கு வந்து அவர்களுக்குத் தேவையான வீரர்களை திட்டமிட்டபடி தட்டிக் தாக்கியுள்ளது. பல வல்லுனர்கள் பெங்களூர் அணியின் அணித் தேர்வை பெரிதாகப் பாராட்டியுள்ளனர்.
இந்த முறை பெங்களூர் அணிக்காக ஏலத்திற்கு சென்ற தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்துள்ளார். அதில் ஏன் பெங்களூர் அணி இளம் இந்திய நட்சத்திரம் இஷான் கிஷன் பதிலாக பில் சால்ட்டை தேர்வு செய்தது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, ” எங்கள் முதல் திட்டம் வெளிநாட்டு ஒப்பனர் தான். ஏனென்றால் பார்மில் இருக்கும் நாளில் அவர்கள் 40,50,60 பந்துகளில் சதம் விளாசுவார்கள். இதனை ஜாஸ் பட்லர் மற்றும் பில் சால்ட் மீண்டும் மீண்டும் செய்து பார்த்திருப்போம். இது போல இந்திய வீரர்களில் இஷான் கிஷன் ஓரளவு விளையாடுவார். ஆனால் இங்கு இந்திய தொடக்க வீரர்களின் பவரில் உடன்பாடில்லை. ” என்றார்.
மேலும், ” எனது டார்கெட் பில் சால்ட் தான். அவர் ஒரு ஓவருக்கு 28% எட்டு ரன்கள், 12-15 ரங்கள்ளை 30% நேரம் அடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் 4 ஓவர்களுக்கு ஒரு முறை 16+ ரன்கள் விளாசுகிறார். ” என அவர் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளார் தினேஷ் கார்த்திக். இரண்டாம் நாள் ஏலத்தில் 11.50 கோடிகளுக்கு பில் சால்ட்டை ஆர்.சி.பி வாங்கியது.

