இந்திய அணி சமீபத்தில் நடந்த முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1 – 3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் டெஸ்ட் தொடரை இழந்து. இந்தத் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு நட்சத்திர வீரர்களுமே நன்றாக செயல்படவில்லை.
இதில் விராட் கோலி, முதல் டெஸ்ட் தொடரில் 5 மற்றும் 100* ரன்களும், இரண்டாம் டெஸ்ட் தொடரில் 7 மற்றும் 11 ரன்களும், மூன்றாம் டெஸ்ட் தொடரில் 3 ரன்களும், நான்காம் டெஸ்ட் தொடரில் 36 மற்றும் 5 ரன்களும், ஐந்தாம் டெஸ்ட் தொடரில் 17 மற்றும் 6 ரன்களுமே எடுத்திருந்தார். பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் தொடரில் செஞ்சுரி (100*) அடித்த விராட் கோலி அதன் பிறகு மற்ற டெஸ்ட் போட்டிகளில் மோசமான விளையாட்டை காட்டினார்.
விராட் கோலியின் இந்த மோசமான பேட்டிங்கை குறித்து ஆஸ்திரேலியா வீரர் ரிக்கி பாண்டிங், விராட் கோலி வெற்றிபெற கடுமையாக முயற்சிப்பதாக கூறியுள்ளார்.
அவர் கடினமாக முயற்சி செய்கிறார், ரிக்கி பாண்டிங்:
ரிக்கி பாண்டிங் ICC ரிவ்யூவின் சமீபத்திய எபிசோடில் பேசும்போது, “என்னை பொறுத்தவரையில் விராட் கோலிக்கு எது சவாலாக இருக்கிறது என்றால், அவர் பேட்டிங்கை சரி செய்ய கடுமையாக முயற்சி செய்கிறார், அது தான் பேட்டிங்கை இன்னும் கடினமாக்குகிறது. சில சமயங்களில், பேட்டிங்கில் நீங்கள் கடுமையாக முயற்சிக்கிறீர்கள் என்றால், வெற்றியடைவது குறைந்து விடும்,”
அவரின் மனதில் ஏற்படும் குழப்பம் காரணமாக இப்படி நடக்கிறது:
“நானும் ஒரு காலத்தில் ரன்களை அடிப்பதை விட அவுட் ஆகாமல் இருப்பதைப் பற்றி அதிகம் சிந்திக்க ஆரம்பித்தேன். அது விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் அதுதான் உண்மையாக இருந்தது. நான் என் அணிக்கு மிகவும் கச்சிதமாகவும், முன்மாதிரியாகவும் இருக்க விரும்பினேன். மேலும் நான் என் அணிக்கு தேவைப்படும் முறையிலேயே தொடர்ந்து விளையாட முயன்றேன்.
நான் வெற்றி பெற ஒரு சின்ன வழி கிடைத்தால் கூட, அதில் இருந்து பிழைக்க முயற்சி செய்தேன். நான் ஷார்ட் பந்துகளை எதிர்கொண்டால், அதை ‘புல்’ செய்து விடுவேன்.
இப்போது விராட்டின் விளையாட்டிலும் கொஞ்சம் அதைப் பார்க்க முடிகிறது. அவர் ஆட்டமிழக்கும் விதத்தைப் பார்த்தாலும் கூட, அந்த பந்துகளை விளையாட வேண்டாம் என்று அவர் விரும்புகிறதை நீங்கள் காண முடியும். ஆனாலும், அவரின் மனதில் ஏற்படும் குழப்பம் காரணமாக ஆஃப் ஸ்டம்ப் வெளியே உள்ளப் பந்துகளை விளையாடிவிடுகிறார். இதுதான் அவர் பேட்டிங்கில் வெற்றி பெறாமல் இருப்பதற்கான காரணமும்.” என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.

