நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டனர், இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணியானது தொடரை விட்டு வெளியேறும் என்பதால் இரு அணிகளும் தன்னால் முடிந்த முயற்சியை செய்தனர்.
முதலில், பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் சத்ரான் 177 ரன்கள் குவித்திருந்தார். இதன் எதிரொலியாக ஆப்கானிஸ்தான் அணியானது 50 ஓவர் முடிவில் 325 ரன்கள் எடுத்தது. 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மட்டும் 120 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியில், ஓமர்சாய் அபாரமாக பந்து வீச 5 விக்கெட் கைப்பற்றி இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ஆப்கானிஸ்தான் அணியின், இப்ராஹிம் சத்ரானையும், அஸ்மத்துல்லா உமர்சாயையும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இந்தப் பதிவுக்கு இப்ராஹிம் சத்ரான் தனது நெகிழச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர்களை இனி அப்படி சொல்லாதீர்கள்:
டெண்டுல்கர் தனது X பதிவில்; “சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தானின் நிலையான எழுச்சி ஊக்கமளிப்பதாக உள்ளது. வெற்றி பெற்றது என ஆச்சரியமாக கூற முடியாது, அதனால் அவர்கள் இப்போது வெற்றிகளை பெறுவது ஒரு பழக்கமாக மாறியுள்ளது. @IZadran18 இன் அற்புதமான சதமும் @AzmatOmarzay இன் அற்புதமான ஐந்து விக்கெட்டுகளும் ஆப்கானிஸ்தான் அணிக்கு மற்றொரு மறக்கமுடியாத வெற்றியை ஏற்படுத்துகிறது. அவர்கள் அருமையாக விளையாடினார்கள் !” என்று கூறியிருந்தார்.
உங்களின் வார்த்தை எங்களுக்கு முக்கியம்:
டெண்டுல்கரின் இந்தக் குறிப்பிற்கு பதிலளித்து சத்ரான் கூறியதாவது; “பல்வேறு தலைமுறைகளை பேட் எடுக்கத் தூண்டிய மாபெரும் கிரிக்கெட் வீரர் @sachin_rt அவர்களால் பாராட்டை பெறுவது எனக்கு மிகப்பெரிய பெருமை. உங்களின் வார்த்தை எனக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் மிகவும் முக்கியம். உங்களின் பாராட்டுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு முன்னதாக, 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் முதன்முறையாக இங்கிலாந்து அணிக்கு ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வியை அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

