டெவால்டு பிரவிஸ் நீக்கமா.? அவரது இடத்தில் புதிய வீரரை களம் இறக்க திட்டம் போடும் சிஎஸ்கே.. வெளியான தகவல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான மினி ஏலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற முடிந்தது. இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் என்ற இருவரையும் 14.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து ஆச்சரியப்படுத்தியது. மேலும் இந்திய வீரர் சர்ப்ராஸ் கானை 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அவரை ஏலத்தில் எடுத்த நாள் முதல் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சையது முஸ்தாக் அலி மற்றும் விஜய் ஹசாரே போன்ற தொடர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்த சீசனில் அவரை விளையாட வைக்கும் முயற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே சென்னை அணியின் பிளேயிங் லெவன் வலுவாக இருக்கும் பட்சத்தில் இவரை எந்த இடத்தில் ஆட வைப்பது என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட தென்னாப்பிரிக்க அணியின் இளம் வீரர் டெவால்டு பிரவிஸுக்கு பதிலாக இந்த முறை சர்பராஸ் கானை களமிறக்கலாம் என்று சிஎஸ்கே திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. சென்னை அணிக்கு பிரவிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் சர்ப்ராஸ் மீது அதிக அளவு சிஎஸ்கே நம்பிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles