இந்த மாதத்தில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்ய உள்ள இங்கிலாந்து அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி வருகிற 22 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரரான கேஎல் ராகுலின் கோரிக்கையை இந்திய தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்த பிறகு அடுத்ததாக சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு ஒரு நல்ல பயிற்சியாட்டமாக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த போட்டிக்கு அஜித் அகர்கர் இந்திய சீனியர் வீரர்கள் அனைவரையும் விளையாட வைக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட வேண்டும் என்று அஜித் அகர்கர் தீவிரமாக முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி வந்த கேஎல் ராகுல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கு பெறுவதற்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு வேண்டும் என்று கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் கே எல் ராகுல் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஆக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் பணியாற்றி வருவதால் அவருக்கு ஒரு நாள் தொடரில் ஓய்வு தர அஜித் அகர்கர் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் துபாயில் இந்திய அணிக்கு நடைபெற உள்ளதால் இந்தியாவில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் சிறந்த பயிற்சி போட்டியாக அமையும்.
இதையும் படிங்க:ரிஷப் பண்ட் கிட்ட இருக்கிற இந்த திறமை நான் யார்கிட்டயும் பார்க்கல.. ரொம்ப அற்புதமா ஆடுறாரு – அஸ்வின் பேட்டி
மேலும் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் துவக்க வீரராக களம் இறங்கி வரும் ஜெய்ஷ்வால் முதல்முறையாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஜெய்ஸ்வால் நிச்சயமாக இடம் பெறுவார் என்பதால் அவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் ஒரு துவக்க புள்ளியாக இருக்கலாம் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

