ரிஷப் பண்ட் கிட்ட இருக்கிற இந்த திறமை நான் யார்கிட்டயும் பார்க்கல.. ரொம்ப அற்புதமா ஆடுறாரு – அஸ்வின் பேட்டி

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை விளையாடி வரும் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பொறுமையாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஈர்த்தார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் ரிஷப் பண்ட் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் அதிரடி கிரிக்கெட் வீரராக கருதப்படும் ரிஷப் பண்ட் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதை காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரராக திகழ்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அவருக்கு உள்நாடு வெளிநாடு என்று எந்தவிதமான பாரபட்சமும் கிடையாது. அனைத்தையும் ஒரே மைதானமாக கருதி அதிரடியாக விளையாடுவதன் மூலமாக அனைவரையும் ஈர்த்து வந்தார்.

- Advertisement -

ஆனால் சமீபத்தில் அவரது டெஸ்ட் பேட்டிங் அணுகுமுறை விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மோசமாக ஆட்டம் இழந்து வெளியேறியது தொடர்ந்து சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது போட்டியின் முதல் இன்னிங்சில் பொறுமையாக விளையாடி உடலில் அடி வாங்கி 40 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்சில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தின் மூலமாக 60 ரன்கள் குவித்து அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ரிஷப் பண்ட் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் போது “ரிஷப் பண்ட் தற்காப்பு ஆட்டம் விளையாட ஆரம்பித்தால் மிகவும் அரிதாகவே ஆட்டம் இழப்பார். உலக கிரிக்கெட்டில் அவரிடம் மிகச் சிறந்த தற்காப்பு ஆட்டம் இருக்கிறது. தற்போதைய நவீன கிரிக்கெட்டை பொருத்தவரை தற்காப்பு ஆட்டம் என்பது மிகவும் அரிதாக மாறி வருகிறது. அவரது இலகுவான கைகள் மூலமாக தற்காப்பு ஆட்டம் மிக நேர்த்தியாக ஆடுகிறார். நான் அவருக்கு வலைகளில் பந்து வீசி இருக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க:யுவராஜ் சிங்க்கு கோலி மரியாதை கொடுக்கல.. ஆனா அவரு கடந்து வந்த பாதை ரொம்ப கஷ்டம் – உத்தப்பா பேட்டி

அவர் வெவ்வேறு ஷாட்கள் விளையாடக்கூடிய வீரராக இருக்கிறார். நான் அவரிடம் நிறைய போராட்டக் குணத்தை வெளிப்படுத்துகிறீர்கள் என்று சொல்ல முயற்சி செய்தேன். கிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் வெவ்வேறான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் உடலில் அடி வாங்கி 40 ரன்கள் குவித்து அதற்கு அடுத்து அதிரடியாக 60 ரன்கள் எடுத்தார். ஆனால் அவர் அதிரடியாக விளையாடிய இரண்டாவது இன்னிங்ஸ் மக்களால் அதிகமாக பேசப்பட்டது. எனவே என்னை பொருத்தவரை அவர் நீண்ட நேரம் நிலைத்து நின்ற விளையாடினால் சதம் அடிக்கும் வாய்ப்பு நிச்சயமாக உண்டு”என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles