புதுசா இருக்கு.. விருதை வென்றும் நிகழ்ச்சியில் பேசாத சிஎஸ்கே வீரர் ரஹ்மான்.. உண்மையில் நடந்தது என்ன.?

உலக கிரிக்கெட்டின் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் அபார பந்துவீச்சால் ஒரு கட்டத்தில் 78 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து ஆர்சிபி அணி தடுமாறியது. அப்போது ஆர் சி பி அணியின் அனுஜ்ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஆறாவது விக்கெட் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ஆர்சிபி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து 50 பந்துகளில் 95 ரன்கள் குவித்தனர்.

- Advertisement -

இவர்களது சிறப்பான ஆட்டத்தால் ஆர்சிபி அணி 173 ரன்கள் எட்டியது. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சில் அறிமுக வீரர் முஸ்தஃபீசுர் ரஹ்மான் மிகச் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதற்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் மும்பை ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்காக விளையாடிய முஸ்தஃபீசுர் ரஹ்மான் சிஎஸ்கே அணிக்கான துவக்க போட்டியில் தனது முதல் ஓவரில் டூப்லசிஸ் மற்றும் ரஜாத் பட்டிதார் ஆகியோரின் வீக்கத்தை வீழ்த்தினார்.

- Advertisement -

பின்னர் தனது இரண்டாவது ஓவரில் விராட் கோலி மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணியின் மற்றொரு அறிமுக வீரரான ரச்சின் ரவீந்திரா மிகவும் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

மேலும் சிவம் தூபே 34 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 27 ரன்களும் எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தனது அறிமுக போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய முஸ்தஃபீசுர் ரஹ்மான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்த பின்னடைப் பெற்ற பரிசளிப்பு விழாவில் இந்த விருது முஸ்தஃபீசுர் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

- Advertisement -

பொதுவாக ஆட்டநாயகன் விருது வாங்கியதும் வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள். போட்டிக்கான பரிசளிப்பு விழாவை தொகுத்து வழங்கும் வர்ணனையாளர் ஆட்ட நாயகன் விருது வாங்குபவர் இடம் போட்டியை பற்றி அவரது அனுபவம் மற்றும் கருத்துக்களை கேட்பார். ஆனால் சென்னை மற்றும் ஆர்சிபி அணிக்கு இடையேயான போட்டியில் முஸ்தஃபீசுர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை பெற்றதும் உடனடியாக சென்று விட்டார்.

இதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது. பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்தவரான முஸ்தஃபீசுர் ரஹ்மான் அவர்களின் தேசிய மொழியான பெங்காலி மொழி மட்டுமே சரளமாக பேசக் கூடியவர். ஹிந்தி ஆங்கிலம் மற்றும் உருது ஆகியவை அவருக்கு மிகக் குறைந்த அளவை தெரியும். மேலும் பரிசளிப்பு விழாவை தொகுத்து வழங்கிய ரவி சாஸ்திரிக்கும் புலமையான பெங்காலி தெரியாது. மேலும் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பெங்காலி புரிந்துகொள்ள தெரியும் என்றாலும் அவருக்கு சுலபமாக பேச வராது.

இதனால் முஸ்தஃபீசுர் ரஹ்மான் பெங்காளியில் பேசுவதை இந்திய அல்லது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ஏற்ற நபர்கள் இல்லை. இதன் காரணமாகவே அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்ட பின் பேட்டி எடுக்கப்படவில்லை என்று தற்போது விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles