ஹேசல்வுட் கம்பேக்.. ஆனால் டிம் டேவிட், ரஜத் பட்டிதர் விளையாடுவதில் சிக்கல்.. ஆர்சிபி பிளேயிங் லெவன்?

ஐபிஎல் தொடரில் நாளை பிளே ஆஃப் சுற்று போட்டிகள் தொடங்கின்றன. குவாலிஃபையர் முதல் சுற்றில் ஆர்சிபி அணி பஞ்சாப் – ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. 10 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அதேபோல் ஆர்சிபி அணி 9 ஆண்டுகளுக்கு பின் குவாலிஃபையர் 1ல் விளையாடுகிறது.

- Advertisement -

3 வீரர்களுக்கு காயம்

இதனால் எந்த அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை ரஜத் பட்டிதர், ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் டிம் டேவிட் ஆகிய 3 வீரர்களும் காயத்தில் சிக்கி இருக்கின்றனர். இதனால் நாளைய ஆட்டத்தில் 3 வீரர்களும் களமிறங்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஜோஷ் ஹேசல்வுட்டை பொறுத்தவரை அவர் ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். கடந்த போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் நாளைய போட்டியில் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனில் ஹேசல்வுட் விளையாடுவார் என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் டிம் டேவிட் இன்னும் ஹாம்ஸ்ட்ரிங் சிக்கிலோடு இருந்து வருகிறார்.

- Advertisement -

ரஜத் பட்டிதர் காயம்

இதனால் ஆர்சிபி அணிக்காக லிவிங்ஸ்டன் தொடர்வார் என்று எதிர்பர்க்கப்படுகிறது. அதேபோல் கேப்டன் ரஜத் பட்டிதர் விரலில் ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து இதுவரை முழுமையாக குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் நாளைய ஆட்டத்திலும் ஆர்சிபி அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா தொடர்வார் என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக ஆர்சிபி அணிக்கு சில பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல் பஞ்சாப் அணியில் மார்கோ யான்சன் சொந்த ஊர் பறந்துள்ளார். இதனால் அவரது இடத்தில் கைல் ஜேமீசன் அல்லது அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆர்சிபி பிளேயிங் லெவன்: பில் சால்ட், விராட் கோலி, ரஜத் பட்டிதர், லிவிங்ஸ்டன், மயங்க் அகர்வால், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, சுயாஷ் சர்மா, புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles