19 ஆவது ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 11 போட்டிகளில் 7 போட்டிகள் வெற்றி அடைந்த புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்குவதால் மீண்டும் ஒருமுறை கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் கலக்கி வரும் ஆல்ரவுண்டரான குருனால் பாண்டியா பந்து வீச்சிலும் அணிக்கு தேவையான சமயங்களில் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் அவர் விராட் கோலி ரோடு விளையாடிய அனுபவம் குறித்த சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது “நான் விராட் கோலி உடன் இந்திய அணியில் அவர் கேப்டனாக இருந்த போது விளையாடி இருக்கிறேன். மேலும் அவருக்கு எதிராகவும் விளையாடி உள்ளேன். அவர் ஒரு மிகச் சிறப்பான மனிதர். வெற்றி பெற வேண்டும் என்கிற வேட்கை அவரிடம் இயல்பிலேயே இருக்கிறது.
எப்போதும் அவரது கண்கள் பொய் சொல்லாது. கிரிக்கெட்டில் இன்னும் என்ன சாதிக்க வேண்டி இருக்கிறதோ அவர் அனைத்தையும் செய்து விட்டார். ஆனால் அவர் இன்னும் பங்களிப்புகளை வழங்க வேண்டி இருக்கிறது என்று நினைக்கிறேன். அவரோடு இணைந்து விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி” என்று பேசி இருக்கிறார்.

