அவர் என்னைவிட ரொம்ப திறமையான வீரர்.. ஊடகங்கள் அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கல – ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதங்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது தனது ஓய்வினை அறிவித்தார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் வீரர் குறித்து அஸ்வின் சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய டெஸ்ட் அணியில் மிக முக்கியமான வீரராக கருதப்பட்ட நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்த போது தொடரின் பாதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வினை அறிவித்தார். இதை யாருமே எதிர்பார்க்காத போது அஸ்வின் ஓய்வினை அறிவித்தது பலரிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் அஸ்வின் இந்திய அணியில் நடக்கும் விஷயங்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் கடைசி பெயராக ரவிந்திர ஜடேஜாவின் பெயர் இடம் பெற்றது. இதனால் ஜடேஜா பிளேயிங் லெவனில் இடம்பெற மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக மேலே இடம் பெற்றிருக்கும் அக்சார் பட்டேல் மேலே விளையாடுவார் எனவும் முன்னாள் வீரர்கள் கூறி வந்தனர். இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜடேஜாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் ஊடகங்கள் அதனை வெளிப்படுத்த தவறிவிட்டன எனவும் சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஜடேஜா என்னைவிட திறமையான ஒரு வீரர். அவர் பிறவியிலேயே கிரிக்கெட் விளையாடும் தகுதி அவருக்கு உள்ளது. மேலும் அவரிடம் உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால் அவருடைய உடல் தகுதியில் இருக்கிறது. இந்த வயதில் கூட அவரால் நன்றாக ஓடி பீல்டிங் செய்ய முடியும். இது குறித்து நான் ஆச்சரியப்பட போவதில்லை. ஏனென்றால் நான் எதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க:சாம்பியன்ஸ் டிராபி கோப்பை விட முக்கியமானது இந்திய அணியை தோற்கடிப்பது.. நமக்கு இம்முறை வாய்ப்பு உள்ளது – பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் பேச்சு

ஒரு வீரர் சிறப்பாக விளையாடும் போது ஊடகங்கள் அதனை பாராட்ட தவறி விடுகின்றன. ஆனால் அவர் மோசமாக விளையாடும் போது அவர் வில்லனாக மாறி விடுகிறார். குறிப்பாக அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜோ ரூட்டை அவுட் செய்தார். அவர் இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் வீரர். அவர் களத்தில் இருக்கும் போது நன்றாக இருக்கிறார். அழுத்தமான சூழ்நிலைகளில் நன்றாக பேட்டிங் செய்கிறார், மேலும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் பந்து வீசுகிறார்” எனக் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles