சாம்பியன்ஸ் டிராபி கோப்பை விட முக்கியமானது இந்திய அணியை தோற்கடிப்பது.. நமக்கு இம்முறை வாய்ப்பு உள்ளது – பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் பேச்சு

வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. தொடருக்கு முன்பு பாகிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, இந்திய அணியுடனான போட்டியைப் பற்றி சீரியசாக பேசியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக சீரமைக்கும் பணியில் இருந்த பாகிஸ்தான் மைதானங்களை நேற்று திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப். அங்கு அவர், சாம்பியன்ஸ் டிராபி வெல்வது மட்டுமல்லாமல் இந்திய அணியை இம்முறை வீழ்த்துவதே முக்கியம் எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

அவர் பேசியதாவது, ” நாம் ஒரு நல்ல அணியைக் கொண்டுள்ளோம். அண்மையில் அணி சிறப்பாகவும் விளையாடி வருகிறது. நம்முடைய இலக்கு, சாம்பியன்ஸ் டிராபி வெல்வது மட்டுமல்ல, துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியாவை தோற்கடிக்க வேண்டும். பாகிஸ்தான் அணியின் பின் நாடே நிற்கிறது. ” என்றார்.

- Advertisement -

மேலும், ” நம் நாட்டில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி தொடர் நடக்கிறது. வருகிற சாம்பியன்ஸ் டிராபியில் நம் அணி சிறப்பாக செயல்பட்டு நாட்டைப் பெருமைப்படுத்துவர் என்பதில் எனக்குப் பெரிய நம்பிக்கை இருக்கிறது. ” என வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்.

இந்தியா – பாகிஸ்தான் ஒரு நாடுகளுக்கு இடையேயான போட்டி பெரிய பரபரப்புக்கு உள்ளானது. ஐசிசி தொடர்களில் எப்போதும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. கடைசியாக துபாயில் நடந்த 2021 டி20ஐ போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்.

- Advertisement -

பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்ததால் துபாயில் இந்திய அணியின் போட்டிகள் நடக்கின்றன. பிப்ரவரி 23 அன்று ஒரு அணிகளும் மோதும் போட்டியில் 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் தோல்விக்கு இந்திய அணி பழி தீர்க்குமா ? அல்ல 2021 போல துபாயில் நடக்கும் போட்டி என்பதால் பாகிஸ்தான் மீண்டும் இந்திய அணியை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles