எதுவுமே நிரந்தரம் இல்லை.. நான் யோசிச்ச அந்த விஷயம் தான்.. ஓய்வு முடிவை அறிவிக்க காரணம் – அஸ்வின் பேட்டி

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அதிலிருந்து பாதியில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தான் ஓய்வு பெற்றதற்கான காரணம் குறித்து சில முக்கிய கருத்துகளை அஸ்வின் தற்போது பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் மூன்றாவது போட்டி இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடிவடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மூன்றாவது போட்டியின் முடிவில் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்தார்.

- Advertisement -

அவரது இந்த ஓய்வு முடிவு யாருமே எதிர்பாராத வகையில் அமைந்தது. டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று ஓய்வை அறிவிப்பதற்கான காரணம் தெரியாமல் இந்திய முன்னாள் வீரர்கள் அனைவரும் சற்று திகைத்தனர். அது மட்டுமல்லாமல் அஸ்வின் ஓய்வுமுடிவை அறிவிப்பதாக இருந்திருந்தால் இந்த தொடரின் முடிவிலேயே அறிவித்திருக்க வேண்டும் பாதியில் வெளியேறி இருக்க கூடாது என்று கூறினார்கள். இந்த சூழ்நிலையில் அஸ்வின் தற்போது அதற்கான காரணம் குறித்து கூறியிருக்கிறார்.

இது குறித்து அஸ்வின் கூறும் பொழுது “நான் என்னுடைய வாழ்க்கையில் எதையும் பிடித்து வைத்துக் கொள்ளக்கூடிய நபர் அல்ல மேலும் பாதுகாப்பற்ற உணர்வோடு ஒரு நாள் கூட இருந்ததில்லை. ஒரு விஷயம் இன்று என்னுடையதாக இருந்தால் அது நாளை வேறு ஒருவருடையதாக மாறலாம் இந்த புரிதல் தான் தற்போது என்ன இந்த முடிவை எடுக்கத் தூண்டி இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க:விராட் கோலியின் பிரச்சனையை அவரிடம் பேசினீங்களா?. பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரோகித் சர்மாவின் சுவாரசிய பதில்

நான் சில விஷயங்கள் குறித்து முன்னரே சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். எனது பக்கத்திற்கான எதிர்காலம் மற்றும் படைப்பிற்கான திசை இல்லை என்பதை முடிவு செய்தால் நான் அப்போது ஓய்வு பெற வேண்டும் என்று முடிவு செய்தேன். எனவே தற்போது அதற்கான காலம் வந்திருப்பதால் எனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறேன். மேலும் மக்கள் என்னை கொண்டாடுவது இந்தியாவில் சில நேரம் கிடைக்கும் கவனத்தை நான் பெரிதாக கவனத்தில் கொள்ள மாட்டேன். இந்த விளையாட்டு எனக்கு எதார்த்தத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது “என்று கூறி இருக்கிறார். எனவே அஸ்வினுக்கு பதிலாக அடுத்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles