விராட் கோலியின் பிரச்சனையை அவரிடம் பேசினீங்களா?. பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரோகித் சர்மாவின் சுவாரசிய பதில்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இதில் நான்காவது டெஸ்ட் போட்டியான பாக்சிங் டே போட்டி வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாளை கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி விடுமுறை தினம் என்பதால் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ரோகித் சர்மா பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை அளித்திருக்கிறார்.

- Advertisement -

அதில் குறிப்பாக இந்திய வீரர் விராட் கோலி தொடர்ந்து ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்கு ஆட்டமிழந்து வரும் நிலையில் அது குறித்து அவரிடம் பேசினீர்களா என்று ரோகித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா மைதானம் குறித்தும் விராட் கோலி குறித்தும் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார். நான்காவது போட்டியில் எப்படி செயல்பட வேண்டும் என்று ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து முடிவு செய்வோம் என்று சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலியை மார்டன் டே கிரிக்கெட் வீரர் என்று கூறுகிறீர்கள். இதனால் அவரிடம் எந்த ஆலோசனையும் வைக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் தனது தவறை எப்படி சரி செய்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். விக்கெட்டில் எவ்வளவு புல் இருக்கிறது அடுத்த போட்டிக்கு எத்தனை சுழற் பந்துவீச்சாளர்கள் தேவைப்படுவார்கள் என்பது குறித்து நாங்கள் ஆலோசிக்க வேண்டும் நாளை விடுமுறை தினம் என்பதால் மைதானத்தில் பணிபுரியும் ஆட்கள் இருக்க மாட்டார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க:அஸ்வினுக்கு நடந்தது அநியாயம்.. கேப்டன்சி தராம ஏமாத்திட்டாங்க.. உண்மையா நடந்ததை நானே சொல்லுறேன் – சுனில் கவாஸ்கர் பேட்டி

எனவே நாங்கள் ஆடுகளத்தின் தன்மையை பார்த்து அதற்குப் பிறகு முடிவு செய்வோம். இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் மைதானத்தில் புல் அவ்வளவாக இல்லை. ஆடுகளம் உணர்ந்து காணப்பட்டது. ஆனால் அடுத்த போட்டி எனக்கு அது போன்று இருப்பதாக தெரியவில்லை. மைதானத்தின் தன்மையைக் கணித்து அதற்கு தகுந்தவாறு அணியை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார். அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles