இந்திய அணியின் ஆஃப் பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் டிசம்பர் 18, புதன்கிழமை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதற்கு முன்னதாக அஸ்வின், உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்தும், தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டார் மற்றும் XI இல் இருந்து வெளியேறினார்.
இந்திய கிரிக்கெட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் அவரை வெளியேற்றி விடுகிறார்கள்:
சுனில் கவாஸ்கர் மிட்-டே இணையதளம் ஒன்றில் கூறியதாவது, “கிரிக்கெட் என்பது பேட்டரின் விளையாட்டு என்பதால், அவன் தொடர்ச்சியாக பிளேயர் ஆஃப் மேட்ச் பரிசை வென்றாலும், அவனுக்கு பேட்டர்களின் கூட்டத்திலிருந்து பாராட்டுகள் கிடைக்கவில்லை.
ஒவ்வொரு முறையும் அவரை 11 வீரர்களில் இருந்து வெளியேற்றுவதற்கு ஐந்து சதவீத நொண்டி சாக்குப் போக்குகள் இருந்தாலும் அதை வைத்துக் கொண்டு அணியில் இருந்து வெளியேற்றி விடுகின்றனர்”.
அவர்களுக்கு மட்டும் ஏன் பொருந்தவில்லை:
முன்னாள் இந்திய கேப்டன் மேலும் குறிப்பிடுகையில், “அவரை இந்திய மண்ணில் விளையாட விடாவிட்டால், அவர்களால் ஆட்டத்தை வெல்ல முடியாது என்பதை அணி நிர்வாகம் அறிந்திருந்தது. ஆடுகளத்தில் சூழ்நிலையானது ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பவுலருக்கு பொருந்தாது என்ற காரணம் இருந்தால், பேட்டர்களுக்கு மட்டும் எப்படி பொருந்துகிறது?
அவர்களைப் பொறுத்தவரை பேட்டர்கள் ஐசிசியால் தரவரிசையில் முதலிடம் வகிக்காவிட்டாலும் பரவாயில்லை. SENA (சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் இதேபோன்ற ஆடுகள சூழ்நிலையில் யார் போராடுவார்கள்? முதல் இடத்தில் உள்ளவர்களா? இல்லாதவர்களாக?”
இதையும் கொஞ்சம் படிங்க: கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.. கோலி இல்லை.. ஆனா இந்த இந்திய வீரர் அடுத்த டெஸ்ட் கண்டிப்பா பெரிய சதம் அடிப்பார்.. எழுதி வச்சுக்கோங்க.. மைக்கேல் கிளார்க் பேட்டி
கடைசி கட்டத்தில் கூட வழி அனுப்பவில்லை:
“இந்தியாவுக்கு அஸ்வின் ஒரு சிறந்த கேப்டனாக இருந்திருப்பார், ஆனால் அவருக்கு துணை கேப்டனாக இருக்கும் மரியாதை கூட மறுக்கப்பட்டது. அஸ்வினுக்கு கடைசி தொடரில் கூட மரியாதை கொடுத்து வழி அனுப்ப வாய்ப்பு இருந்தாலும், அதும் அவருக்கு மறுக்கப்பட்டது.
அதனால்தான் ரோகித் ஷர்மா அஸ்வினை அவரது 100வது டெஸ்ட் போட்டியில் அணியை வழிநடத்த அழைத்தபோது, அது பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது.” என்று கூறி முடித்தார், கவாஸ்கர்.

