நான் சொன்னதைத்தான் முன்னாடி தோனி சொல்லி இருக்காரு.. அப்பா அவர் மட்டும் நீங்க ஏன் திட்டல.. ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதங்கம்

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் ஆனது இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து அணிகளும் மிகவும் தீவிரமான முறையில் தயாராகி வருகிறது. இதில் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி ஓய்வு பெற்ற நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமீபத்தில் தனக்கு நடந்த நிகழ்வு ஒன்று குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் பெரிய ரசிகர் பட்டாளங்களைக் கொண்ட அணிகள் என்று எடுத்துக் கொண்டால், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளை கூறலாம். அகல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மற்ற இரண்டு அணிகளை விட சற்று கூட எல்லாம் ரசிகர் பட்டாளங்கள் உண்டு. இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பெங்களூர் ரசிகர்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் அவரை பாம்புப் படை என்று கிண்டல் செய்து வந்தது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அஸ்வின் கூறும் போது “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அதன் ரசிகர்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்று நான் கூறியிருந்தேன். இதனால் மற்ற ரசிகர்கள் என்னை பாம்பு படை அதாவது விஷ தன்மை கொண்டவன் என்று கேலி செய்தனர். ஆனால் இதற்கு முன்பு மகேந்திர சிங் தோனியே பெங்களூர் ரசிகர்களை பாராட்டி பேசி இருந்தார். அப்போது இது போன்ற விமர்சனங்கள் எழவில்லை. இதனால் நட்சத்திர அந்தஸ்து கொண்ட வீரர்களுக்கு இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்கள் பெரிதாக எழுவதில்லை” என்று அஸ்வின் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles