19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது வருகிற சனிக்கிழமை முதல் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை தங்களுடைய பேட்டிங் யூனிட்டை மிகவும் பலப்படுத்தி களம் இறங்குகிறது. கடந்த ஆண்டு செய்த தவறுகளை அத்தனையும் சரி செய்து இந்த முறை களம் இறங்கும் நிலையில் எம் எஸ் தோனி மீண்டும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் எம் எஸ் தோனியின் தேவை எந்த இடத்தில் உதவியும் என்று சிஎஸ்கே முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது ” தற்போது உள்ள சிஎஸ்கே பௌலிங் யூனிட்டுக்கு எம் எஸ் தோனி மிகவும் தேவையானவராக இருப்பார் ஏனென்றால் அவருக்கு தான் சற்று அனுபவம் இல்லாத பௌலிங் யூனிட் எப்படி வழிநடத்த வேண்டும் என்கிற திறமை இருக்கிறது. மேலும் அவர் கடைசியில் தான் பேட்டிங் செய்ய விரும்புகிறார்.
இதனால்தான் கடந்த ஆண்டு சரியான பேட்டிங் யூனிட் அமையாததால் அவர் முன்னரே களம் இறங்க வேண்டிய தேவை உருவானது. இதற்காகத்தான் இந்த முறை பேட்டிங் யூனிட் மீண்டும் வலுவாக அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த முறை எம் எஸ் தோனி மூன்று அல்லது நான்கு முறை தான் இந்த மொத்த தொடரில் கொஞ்சம் முன்னர் களமிறங்க வேண்டி வரும். எனவே அவர் ருதுராஜுக்கு களத்தில் மிகவும் உதவியாக இருப்பார் என்று பேசியிருக்கிறார்.

