இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது அரையிறுதி கிரிக்கெட் போட்டி இன்னும் சில மணி நேரங்களில் நடைபெற இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் டிராவிஸ் ஹெட்டை அவுட் ஆக்கும் விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று அரை இறுதி போட்டி நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக விளங்கி வரும் டிராவிஸ் ஹெட்டை அவுட் ஆக்க வருண் சக்கரவர்த்தியிடம் பந்தை கொடுக்குமாறு ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அஸ்வின் பேசும்போது “புதிய பந்தை வருண் சக்கரவர்த்தியிடம் கொடுத்து ஹெட்டுக்கு ஓவர் ஸ்டம்பிலிருந்து பந்து போடச் சொல்லுங்கள். ஹெட் எப்போதுமே மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி நிற்கக்கூடிய ஒரு பேட்ஸ்மேன். தனது கால்களை நகர்த்தி பீல்டர் திசைக்கு மேல் அடிக்கக்கூடிய ஒரு பேட்ஸ்மேனாக அவர் இருக்கிறார். இது இந்திய வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும். இது அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கக் கூடியதாக நிச்சயமாக இருக்கும்.
மேலும் வருணுக்கு எதிராக அவர் தற்காப்பு ஆட்டத்தில் விளையாடினால் அது எனக்கு முற்றிலும் ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால் ஹெட் தாக்குதல் பாணி ஆட்டத்தையே பெரும்பாலும் ஆடக்கூடியவர். ஒரு விஷயம் ஆஸ்திரேலியா அணிக்கு அவர் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பார், இல்லையென்றால் வருண் அவரது விக்கட்டை விரைவாக கைப்பற்றுவார் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று நிச்சயமாக நடக்கும். நாம் வருணை அந்த இடத்தில் 5 ஓவர்கள் வரை வீச வைத்து விடலாம்.
மேலும் ஆஸ்திரேலியா அணியில் பல ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அவர்களை ஜடேஜா மற்றும் அக்சார் பட்டேலை வைத்து சமாளித்து விடலாம். என்னை பொருத்தவரை டாஸ் வென்றால் இந்திய அணி அவர்களை முதலில் பேட்டிங் செய்ய வைத்து விட்டு டோட்டலை செட் செய்ய வைக்க வேண்டும். இதில் ஹெட் விக்கட்டை கைப்பற்றினால் அதற்கு பிறகு ஆட்டம் நம்முடையதாக இருக்கும்.
இதையும் படிங்க:இந்தியா vs ஆஸ்திரேலியா.. பிளேயிங் லெவனில் ஒரு மாற்றத்தை செய்யும் ரோஹித் சர்மா.. யாரை நீக்குவார்கள்?
இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் தேவையான ரன்களை எடுக்கும் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இருக்கப் போவதில்லை. அதேநேரம் ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்பென்சர் ஜான்சனின் பந்துவீச்சு முதல் ஸ்பெல் சிறப்பாக இருக்கும். இந்திய அணி அதே நேரத்தில் இதே சுழற்பந்து வீச்சு வரிசையுடன் விளையாடும். எனவே ஆஸ்திரேலிய அணிக்கு இழப்பதற்கு இந்த சமயத்தில் எதுவுமே இருக்காது என்பதால் இந்திய அணி அவர்களை முதலில் பேட்டிங் செய்ய வைத்து டோட்டல் செட் செய்ய விட வேண்டும் என்பதை எனது கருத்தாகும்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.

