இந்தியா vs ஆஸ்திரேலியா.. பிளேயிங் லெவனில் ஒரு மாற்றத்தை செய்யும் ரோஹித் சர்மா.. யாரை நீக்குவார்கள்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. துபாய் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ஏற்கனவே 1.3 லட்சம் மக்கள் முன்னிலையில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. 

- Advertisement -

இந்த தோல்வியில் இருந்து இந்திய அணி இதுவரை மீண்டு வரவில்லை. அதற்கு கணக்கு தீர்க்கும் வகையில் நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா அணி இம்முறை முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் விளையாடி வருகிறது.

- Advertisement -

டிராவிஸ் ஹெட் சிக்கல்

- Advertisement -

இந்த ஆட்டத்தை பொறுத்தவரை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நடக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட்டை வீழ்த்த இந்திய அணியிடம் எந்த திட்டமும் இல்லை. ஏற்கனவே ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் இருக்கிறது. 

ஆனால் இம்முறை டிராவிஸ் ஹெட்டின் வீக்னஸை கணக்கில் வைத்து இந்திய அணி களமிறங்கும் என்று பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் ஆடிய வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக இம்முறை அர்ஷ்தீப் சிங் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால் டிராவிஸ் ஹெட்-க்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளரை எதிர்கொள்வதில் சிக்கல் உள்ளது.

- Advertisement -

பிளேயிங் லெவன்

இதனை பல்வேறு தருணங்களிலும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் நிரூபித்துள்ளனர். அதன்பின் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. வழக்கம் போல் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி உள்ளிட்ட டாப் ஆர்டர் வீரர்களும், ஸ்ரேயாஸ், அக்சர் படேல், கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் பின் தொடர்வார்கள் என்று நம்பலாம். 

இந்திய அணியின் பிளேயிங் XI: ரோகித் சர்மா ( கேப்டன் ), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles